G20 Presidency: புதுச்சேரியில் நாளை மறுநாள் ஜி20 மாநாடு: பலத்த பாதுகாப்பு

உலக நாடுகள் அங்கங்கம் வகிக்கும் ஜி-20 க்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை மறுநாள் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கின்றது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் தலைமை ஏற்று மாநாடு நடத்தப்படவுள்ளது. நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் ஜி.20 உறுப்பு நாடுகளை சேர்ந்த 75 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜி 20 மாநாடு நடக்கும் திருமண மண்டபம், மற்றும் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகளில் ஐந்து கட்ட பாதுகாப்பு போடப்படவுள்ளது. இதற்காக தேசிய மீட்பு பேரிடர் குழு தென் மண்டல டிஐஜி மனோஜ் குமார் யாதவ் தலைமையில் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர் அவர்கள் வெளிநாட்டினர் செல்லும் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் தலைமையில் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகள் என்ன எடுப்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர்மீட்பு வீரர்கள் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகளுடன் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஜி 20 பிரதிநிதிகளில் பாதுகாப்பு கருதி மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி மற்றும் விமான நிலையம் ஆகிய 5 இடங்களில் 144 தடை சட்டம் நாளை காலை முதல் பிப்.1 வரை அமலில் இருக்கும் என்றும் இந்த பகுதியில் வான்வழி போக்குவரத்து சேவைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.