'எவன்டா உள்ளபோக சொன்னா..?' தலித் இளைஞரை மிரட்டியவர் தற்காலிகமாக நீக்கம் – திமுக

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் தலித் இளைஞன் பிரவீன்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார்.

அதற்கு அங்குள்ள இடைநிலை சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே தலித் இளைஞன் பிரவின் குமார் திரும்ப வந்துவிட்டார். இந்த விஷயத்தை அப்பகுதியில் உள்ள திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும் தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரிடம் தகவல் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து திருமலைகிரி ஊர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு மாணிக்கம் தலைமையில் பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். அப்போது, பிரவீன்குமார் மற்றும் அவரது தாய், தந்தைக்கு தகவல் சொல்லி பஞ்சாயத்துக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த பிரவீன்குமாரை அவரது தாய், தந்தை மற்றும் அங்கிருந்த இடைநிலை சமூக மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால், கொச்சை கொச்சையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளார் மாணிக்கம்.

மேலும், எங்களை பகச்சிக்கிட்டா நீங்க தொழில் பண்ண முடியாது; இங்க இருக்க முடியாது’ உங்கள அடித்துக் கொன்று விடுவேன் என திமுகவைச் சேர்ந்த மாணிக்கம் மிரட்டி உள்ளார். மேலும், அவர் மிரட்டி கொண்டிருக்கும்போதே அப்பகுதியை சேர்ந்த மற்றொரு நபர், இவன் இந்த கோவில் 18 பட்டிக்கு சொந்தமானது என்று பேசுகிறான், இவன் யாரோ சொல்லிக் கொடுக்கும் பேச்சை கேட்டு தான் இப்படி பேசுகிறார் என்று சாதி ஆதிக்க வெறியோடு பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாகிய நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மீது கண்டனங்கள் குவிந்து வந்தன.

இந்த நிலையில், தலித் இளைஞர் மீது சாதி வன்மத்தை கக்கிய திமுக ஒன்றிய செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயளாலர் டி. மாணிக்கம், கழக கtடுபாட்டை மீறியும், கழகட்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.