சேலம்: சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திட்டிய மாணிக்கம் என்பவர் கைது செய்துள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் கொடுத்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர். சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளராக இருந்த மாணிக்கம் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.