தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகையை 4.40 லட்சம் பேர் பெறவில்லை..!

தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட 1000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி  தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய, பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

ஏராளமானோர் பொங்கல் தொகுப்பை பெற்ற நிலையில், பெங்கல் பரிசை பெறாத 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 பேருக்கு ஒதுக்கப்பட்ட, 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதை அதிகாரிகள் அரசு கருவூலத்தில் செலுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.