"திருமண ஆசைகாட்டி ரூ.10.5 லட்சம் பறித்துவிட்டனர்!" – மூன்று பெண்கள்மீது தொழிலதிபர் போலீஸில் புகார்

​தேனி மாவட்டம், கம்பத்​தைச் சேர்ந்தவர் ​​​முகமது​ ​​​ரஃபீக் ​(58). தி.மு.க பிரமுகரான இவர், ​கம்பத்தில் இரண்டு ஹோட்டல்கள் நடத்திவருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஏலத்தோட்ட விவசாயமும் செய்துவருகிறார். இவரின் இரு ​மகன்க​ள் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்துவருகின்றனர். நோய்வாய்​ப்பட்ட இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இற​ந்துவிட்டதால், ரஃபீக்  தனியாக வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில் தன்னிடம் மேனகா, சத்யா, ஜீவா ஆகியோர் பழகி 10.5 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கம்பம் வடக்கு ​போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார். அதனடிப்படையில்​ கம்பம் வடக்கு போலீஸார் மேனகா, சத்யா, ஜீவா ​ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

பணம்

​​​முகமது​ ​​​ரஃபீக்​ தன்னுடைய புகாரில், “சின்னமனூ​ரைச்​​ சேர்ந்த ஜீவா, கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ​​சத்யா ​ஆகியோர் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த மேனகாவை அறிமுகம் செய்து, `இவரிடம் பழகுங்கள், உங்களைத் திருமணம் செய்துகொள்வார்’ என ஆசைவார்த்தைக் கூறினர். அதையடுத்து, நானும் மேனகாவுடன் செல்போன் மூலமாகப் பேசி​ பழகி ​​வந்தேன். மேனகா என்னைத் ​திருமணம் முடித்துக்கொண்டு வாழ்க்கை முழுவதும், என்கூடவே இருப்பதாக ஆசைவார்த்தை கூறி​னார். இதையடுத்து​ கடந்த ​டிசம்பரில் மேனகா வங்கிக் கணக்குக்கு அவர் கேட்டதன்பேரில் ​50,000​ ரூபாய் அனுப்பிவைத்தேன். ​மீண்டும் தனக்கு அவசர தேவை இருப்பதாகவும், தன் உறவினர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறி, என்னிடம் 10 லட்சம்​ ​ரூபாய் கேட்​டார்.​​

விசாரணை

​மேனகா சார்பாக ​​சத்யா, ஜீவா இருவரும் வந்து என்னிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற​னர். அதன் பிறகு, அனைவரின் செல்போன்களுமே ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டன. அதன் பிறகே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, அவர்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டு என்னுடைய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இவரின் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து ​​முகமது ​​​ரஃபீக்கிட​ம் பேசினோம். “ஜீவா, சத்யா ஆகியோர் என்னுடைய ஹோட்டலில் வேலை செய்துவந்தனர். பிறகு இங்கிருந்து விலகி அவர்கள் தேனியில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தனர். அங்குதான் மேனகா அவர்களுக்குப் பழக்கமாகியிருக்கிறார். அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து என்னை ஏமாற்றி பணம் பறித்துவிட்டனர்” என்றார்.

கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணனிடம் விசாரித்தோம். “இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம். மேனகா ​என்பவர்தான் இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். அவர்மீது ஏற்கெனவே வழக்குகள் இருக்கின்றன.​ சம்பந்தப்பட்ட மூன்று பெண்களிடமும் விசாரணை நடத்தப்படும்” என்றார். ​

மோசடி

கடந்த ஆண்டு மேனகா தேனி அருகே ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்தபோது, அந்தக் கடையின் உரிமையாளர் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக போலீஸில் புகாரளித்தார். அந்த வழக்கில் ஜவுளிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார். மேலும், மேனகா மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தேனி, சின்னமனூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.