பணத்தை வைத்து எதையும் வாங்கும் கட்சி திமுக… ஆதாரமாக வீடியோ வெளியிட்ட அண்ணாமலை..!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியில் அமர்ந்திருக்கும் தி.மு.க, மக்களின் பேராதரவு தங்கள் ஆட்சிக்குத்தான் அப்படியே நீடிக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காகத் திமுக தன் வசமிருக்கும் ஆட்சி அதிகாரத்தையும், குவிந்து கிடக்கும் எல்லையற்ற பணத்தையும் பயன்படுத்தி எல்லா வகையிலும் வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு முயலும் என பாஜக குற்றஞ்சாட்டிவருகிறது.

இந்நிலையில் அதனை நிரூபிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில், திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி; பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்” எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் அமைச்சர் நேரு உரையாடிக்கொண்டிருக்கிறார். அப்போது அமைச்சர் நேரு, “அவன் என்னத்துக்கு அவன் தண்டம், மந்திரியெல்லாம் கூடாது… தேவை இல்லை. நான் நேற்றே சொல்லிவிட்டேன் எல்லாரும் வந்துடுங்கனு சொல்லிட்டேன் மாவட்ட நிர்வாகி எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன் நீங்க அங்க இருங்க…

சொல்லனும்னு நினைச்சேன்… நீ எல்லா மாவட்ட தலைவரையும் கூப்பிட்டு காசு பணம்லாம் குடுக்கனும். பிளாட்டினம் மஹாலில் மதியம் எல்லாரையும் கூப்பிட்டு பணம் கொடுத்து செட்டில் பண்ணிட்டு… 30,31ஆம் தேதி, 1 ஆம் தேதிக்குள்ள எல்லாத்தையும் பண்ணி முடிச்சிடனும்.. 31 பூத்திலும் 10,000 பேர் ரெடி பண்ணனும், நாளைக்கு தலைவர் ஸ்டாலினே அதிகாரிகளுக்கு வாட்சி, பிரியாணி தர போறாரு… இப்போ நான் புறப்பட்டு திருச்சி போய், அங்கிருந்து சென்னை போய்…

அங்க கூட்டத்தை முடிச்சிட்டு கோயம்புத்தூர் போய்… 31 ஆம் தேதி ராத்திரி இங்க வந்துருவேன். எல்லாத்தையும் முடிச்சிட்டேன். பழனி அண்ணன் வரதையும், மகேஷ் வந்தா பார்ப்போம் இல்லை என்றால் நம்மலே பண்ணிடுவோம். நாசர் 5-க்கு மேல வேண்டாம் வேண்டாம் என்கிறான்… நாசர்னு போட்டா சங்கடப்பட்டு கிடக்கிறான். அங்க இருக்குற லோக்கல் ஆளுங்க… அண்ணங்கனாலே.. விடுதலை சிறுத்தைகள்… அவன் எங்கெல்லாம் கொடுக்கவில்லையோ பார்த்து கொள்ளுங்கள்.. ஆனால் நம்ம குடுத்து விடலாம். நான் கொடுத்துவிட்டேன். செந்தில் பாலாஜியும் கொடுத்துவிட்டார். ஏன் அவன இங்க ஒக்கார வைக்கணுமா?” என பேசியுள்ளார். இது அங்கிருந்த மைக்கில் பதிவாகியிருக்கிறது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.