'நான் செய்தது எனக்கே பிடிக்கவில்லை' FIFA உலகக்கோப்பை 2022-ல் சர்ச்சைக்காக வருந்தும் மெஸ்ஸி


கத்தாரில் நடந்த 2022 FIFA உலகக்கோப்பையில் ஏற்பட்ட சர்ச்சைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் லியோனல் மெஸ்ஸி.

வருந்துவதாக ஒப்புக்கொண்ட மெஸ்ஸி

FIFA உலகக் கோப்பை 2022 காலிறுதிக்குப் பிறகு நெதர்லாந்து நட்சத்திரம் Wout Weghorst உடனான சர்ச்சைக்குரிய மோதல் குறித்து அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மனம் திறந்துள்ளார். அவர் தனது செயலுக்கு வருந்துவதாக ஒப்புக்கொண்டார்.

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2022 FIFA உலகக் கோப்பையை வென்றது, இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்சை பெனால்டியில் வீழ்த்தியது.

AP

5-வது முயற்சியில் மெஸ்ஸியின் முதல் உலகக் கோப்பை வெற்றி நனவானது. இதற்காக அர்ஜென்டினா ஜாம்பவான் மெஸ்ஸி அவரது பல பாராட்டுகளைப் பெற்றார்.

நான் செய்தது எனக்கே பிடிக்கவில்லை

ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்துடனான கால் இறுதிப் போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளானது. நெதர்லாந்து மேனேஜர் லூயிஸ் வான் கால் மற்றும் ஸ்ட்ரைக்கர் வுட் வெகோர்ஸ்டுடன் மோசமாக நடந்து கொண்ட மெஸ்ஸி, அப்போது தான் செய்தது பிடிக்கவில்லை என்று இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

வானொலி நிகழ்ச்சியான பெர்ரோஸ் டி லா கால்க்கு அளித்த பேட்டியில் வெகோர்ஸ்ட் சம்பந்தப்பட்ட சம்பவத்தைப் பற்றி பேசுகையில், “நான் அதைப் பற்றி நினைக்கவில்லை, அந்த நேரத்தில் அது நடந்துவிட்டது” என்று மெஸ்ஸி கூறினார்.

FPJ

மெஸ்ஸி, நெதர்லாந்து மேனேஜர் Van Gaal தன்னைப் பற்றி என்ன சொன்னார் என்று அவரது அணியினர் தெரிவித்ததாக கூறினார். ஆட்டத்தின் அனைத்து பதற்றத்திற்கும் மத்தியில், மெஸ்ஸி தனது பொறுமையை இழந்தார், ஆனால் அவர் இதுபோன்ற விடயங்களை செய்ய நினைக்கவில்லை.

“விளையாட்டிற்கு முன் அவர் கூறியது, அவர் (வான் கால்) என்ன சொன்னார் என்பது எல்லாம் எனக்குத் தெரியும். எனது அணியினர் சிலர் கூட ‘அவர் சொன்னதைப் பார்த்தீர்களா’ என்று வேண்டுமென்றே என்னிடம் சொன்னார்கள்.

அது சரி, எல்லாம் முடிந்ததும், நான் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை, கடந்து செல்வோம், அதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை..,” என்று மெஸ்ஸி கூறினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.