‘முஸ்லிம் நடிகர்கள் தான்..!’ – கங்கனா ரனாவத்தின் லேட்டஸ்ட் சர்ச்சை.!

தமிழில், தாம்தூம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பேசும் தலைவி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்துவருகிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து நடிகை கங்கனா ரனாவத் வன்முறை தூண்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருசில கருத்துகளை பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு மே மாதம் நடிகை கங்கனாவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கொரோனா குறித்து கங்கனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் அதிரடியாக நீக்கப்பட்டது. ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதால், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார் கங்கனா.

நடிகை கங்கனா ரனாவத்திற்கு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத், ‘1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. காங்கிரஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சி’ என்று பேசியிருந்தார்.

அவருடைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. பகத்சிங், காந்தி, நேதாஜி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்தியாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது கங்கனாவின் வழக்கமாக மாறிவிட்டது.

இந்நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகள் தடைக்கு பின் நடிகை கங்கனாவின் டுவிட்டர் பக்கம் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கங்கனாவின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கிய டுவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை மீண்டும் செயல்பட்டிற்கு கொண்டு வந்துள்ளது. தனது டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் நடிகை கங்கனா பதிவிட்ட முதல் ட்விட்டில், அனைவருக்கும் வணக்கம், இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியாக உள்ளது’ என்று பதிவிட்டார்.

இந்தநிலையில் பதான் படத்தின் வெற்றியால் நடிகர் ஷாருக்கான் மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்த நாடு அனைத்து கான்களையும், சில சமயங்களில் கான்களையும் மட்டுமே நேசித்துள்ளது. மேலும் முஸ்லீம் நடிகைகளின் ஆதிக்கத்தால், இந்தியாவை வெறுப்பு மற்றும் பாசிசம் என்று குற்றம் சாட்டுவது மிகவும் நியாயமற்றது. உலகில் பாரதம் போல் வேறு பாதுகாப்பான நாடு இல்லை’’ என அவர் தெரிவித்தார்.

பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை: விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

இதற்கு பதிலளித்த நடிகை உரோஃபி, ‘‘நடிகர்களில் இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லை. கலை மதத்தால் பிளவுபடாது’’ எனறு தெரிவித்தார். அதற்கு பதிலடி கொடுத்த கங்கனா, ‘‘ ஆம், என் அன்பான உரோஃபி அது ஒரு சிறந்த உலகமாக இருக்கும். ஆனால் நம்மிடம் ஒரே மாதிரியான சிவில் கோட் இல்லையென்றால் அது சாத்தியமில்லை, இந்த தேசம் அரசியலமைப்பில் பிரிக்கப்படும் வரை அது பிளவுபடும். 2024 இல் மோடிஜியிடம் அனைவரும் ஒரே மாதிரியான குடிமைக் குறியீட்டைக் கோருவோம். நாம் செய்யலாமா?” என்று அவர் தெரிவித்தார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.