ரஷ்யாவில் ஆட்சி முடிவதற்குள்…புடின் இதனை “தன்னுடைய விதி” என நம்புகிறார்! பாதுகாப்பு செயலாளர் கருத்து


தனது ஆட்சிக் காலம் முடிவதற்கு முன் ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீட்டெடுப்பது “தன்னுடைய விதி” என்று ஜனாதிபதி புடின் நம்புகிறார் என ராபர்ட் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

புடினின் விருப்பம்

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி விட்ட நிலையில், நாட்டின் எல்லைப் பகுதியில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தனது ஆட்சிக் காலம் முடிவதற்கு முன் ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீட்டெடுப்பது “தனது விதி” என்று தீவிரமாக நம்புகிறார் என முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர்  ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஆட்சி முடிவதற்குள்…புடின் இதனை “தன்னுடைய விதி” என நம்புகிறார்! பாதுகாப்பு செயலாளர் கருத்து | Putin Believes Restore Empire It His DestinyGetty Images

கேட்ஸ் விமானப்படை மற்றும் சிஐஏ-வில் தனது வாழ்க்கையை தொடங்கினார், பின் 2006ல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக உயர்ந்து 2011ல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை NBC நியூஸின் மீட் தி பிரஸ்ஸில், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை குறித்த விவாதத்தின் போது 79 வயதான ராபர்ட் கேட்ஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


உக்ரைனும் அடங்கும்

இந்த உரையாடலில் ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீண்டும் உருவாக்க புடின் விரும்புகிறார் என்று கருத்து தெரிவித்த இருந்த கேட்ஸ், தனது பழைய வழிகாட்டியான Zbig Brzezinski, ரஷ்ய சாம்ராஜ்யம் என்பது உக்ரைன் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறுவார் என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஆட்சி முடிவதற்குள்…புடின் இதனை “தன்னுடைய விதி” என நம்புகிறார்! பாதுகாப்பு செயலாளர் கருத்து | Putin Believes Restore Empire It His DestinyGetty Images

எனவே உக்ரைனை கைப்பற்றுவதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தீவிரமாக உள்ளார், மேலும் நேரம் அவர் பக்கம் இருப்பதாக நம்புகிறார், ரஷ்ய துருப்புகள் எப்போதும் செய்வதையே புடினும் செய்கிறார் என குறிப்பிட்டுள்ளார். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.