வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல்| Economic survey pegs India’s GDP growth at 6-6.8% in FY23-24

புதுடில்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 2023 -24 நிதியாண்டில் 6.5 சதவீதம் ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

*இந்திய பொருளாதாரம் 2023 – 24 ல் 6.5 சதவீம் வளரும். தற்போதைய நிதியாண்டில் அது 7 சதவீதமாக இருக்கும். 2021- 22 ல் 8.7 சதவீதமாக இருந்தது.

*உலகில், தொடர்ந்து வேகமாக வளரும் நாடாகவே இந்தியா நீடிக்கிறது.

*பர்சேசிங் பவர் பாரிட்டி அடிப்படையில், இந்தியா 3வது பெரிய வளர்ந்த பொருளாதார நாடாக வும், எக்ஸ்சேஜ் ரேட் அடிப்படையில் 5வது பெரிய நாடாகவும் திகழ்கிறது.

*கோவிட் காலத்தில் மெதுவான பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. இழந்ததை கிட்டத்தட்ட மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.

*நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவீதம் ஆக இருக்கும். இது தனியார் நுகர்வை தடுக்கும் அளவுக்கு அதிகமாகவும், முதலீட்டை பலவீனப்படுத்தும் அளவுக்கும் இல்லை.

*கடன் வாங்கும் அளவு நீண்ட காலம் அதிகமாகவே இருக்கும்.

*அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் சாத்தியக்கூறுகளுடன் உள்ளதால், ரூபாய் மதிப்பு சரிவுக்கான சவால் நீடிக்கிறது.

*உலகளாவிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதால், நடப்புக்கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து விரிவடையும். ரூபாய் மதிப்பு நெருக்கடிக்கு உள்ளாகலாம்.

*தொற்று நோயில் இருந்து இந்தியா மீள்வது ஒப்பீட்டளவில் விரைவாக உள்ளது. வளர்ச்சி உள்நாட்டு தேவையால் ஆதரிக்கப்பட வேண்டும். மூலதன முதலீட்டை உயர்த்த வேண்டும்.

*நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ஏற்றுமதியின் வளர்ச்சி மிதமானது.

*பெரும்பாலான பொருளாதாரங்களை விட இந்தியா அசாதாரண சவால்களை எதிர்கொண்டது.

*உலக வளர்ச்சி குறைதல், உலகளாவிய வர்த்தகம் சுருங்குவது ஆகியவை நடப்பு ஆண்டின் 2வது பாதியில் ஏற்றுமதி பாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.