Thalapathy 67: லாக்டவுனில் ரெடியான தளபதி 67 ஸ்க்ரீப்ட்.. டீசரால் இம்ப்ரஸான கமல்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

தளபதி 67 படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புவிஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வசூல் வேட்டையாடி வரும் நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது. இதில் ரத்தக்கறையுடன் கையில் காப்பை வைத்துக் கொண்டு இருந்தனர் விஜய்யும் லோகேஷ் கனகராஜும். அந்த போஸ்டரில் இருவரது முகமும் அவ்வளவு க்யூட்டாக இருந்தது. ​ Vijayakanth: விஜயகாந்தின் திருமண நாளில் விஜய் அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்…. கலக்கல் க்ளிக்ஸ்!​
மீண்டும் கூட்டணிஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்யும் லோகேஷ் கனகராஜும் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில் மீண்டும் தளபதி 67 படத்தில் இருவரும் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சாதான் தளபதி 67 படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
​ Vijayakanth SAC meet: திடீரென விஜயகாந்தை சந்தித்த விஜய்யின் அப்பா… கைகளை பிடித்து முத்தம் கொடுத்து உருக்கம்!​
அர்ஜுன் வில்லன்தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு 2, 3 நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தளபதி 67 படத்தில் இந்த படத்தில், அர்ஜுன் வில்லனாக நடிப்பதாகவும் இதற்காக அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசன் இப்படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.​ Vignesh Shivan, Nayanthara: அதிலும் சொதப்பிய விக்கி… சோதனை மேல் சோதனையா இருக்கே!​
லாக்டவுனில் ரெடிஇந்நிலையில் தளபதி 67 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காலை தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனிடையே தளபதி 67 படத்தன் ஸ்க்ரிப்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்க்கான இந்தக் கதையை கொரோனா லாக்டவுன் நேரத்திலேயே தயார் செய்து விட்டாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மேலும் படத்திற்கு டீசர் ஒன்றும் ரெடியாகிவிட்டதாம்.
​ Vijayakanth SAC meet: திடீரென விஜயகாந்தை சந்தித்த விஜய்யின் அப்பா… கைகளை பிடித்து முத்தம் கொடுத்து உருக்கம்!​
டீசரால் இம்ப்ரஸான கமல்இந்த டீசரை நடிகர் கமல்ஹாசனிடம் போட்டுக் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். டீசர் மாஸாக இருப்பதை பார்த்த கமல்ஹாசன், படத்தில் தனக்கு கேமியோ அப்பியரன்ஸ் வேண்டாம், 20 நிமடத்திற்கு காட்சி கொடுங்கள் என கேட்டுள்ளாராம். வழக்கமாக மற்ற ஹீரோக்களின் படங்களில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்க மாட்டார் நடிகர் கமல்ஹாசன். ​ Dancer Ramesh Death: தாங்க முடியலம்மா… உருட்டுக்கட்டையால் அடித்த இன்பவள்ளி.. கதறும் டான்ஸர் ரமேஷ்.. ஷாக்கிங் வீடியோ!​
அதுதான் காரணம்ஆனால் லோகேஷ் கனகராஜ் மீதுள்ள அபரிமிதமான அன்பால் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளாராம் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. கமலின் கெரியரில் இல்லாத அளவுக்கு வசூலை குவித்தததே கமல் இப்படி இறங்கி வர காரணம் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள். தளபதி 67 படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​ Valaxmi Sarathkumar: குடும்பத்துடன் பிகினியில் ஆட்டம் போட்ட வரு… தீயாய் பரவும் வீடியோ!​
Kamal in Thalapathy 67

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.