எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாட்டுக்கான தொலைநோக்கி திட்டத்துடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பாட்டால் பாஜக வெற்றி பெறுவது கடினம். இதுதான் இன்றைய நிலவரம் என்பதை கலத்திலிருந்தே உணர்ந்துள்ளேன். எனவே எதிர்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திண்டுக்கல்: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணீயில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

வேட்பாளராக யாரும் இருக்கலாம் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராவார்: அசாம் முதல்வர் அதிரடி

புதுடெல்லி: ‘‘2024ல் மீண்டும் பிரதமர் ஆகப் போவது நரேந்திர மோடிதான்’’ என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அளித்த பேட்டி குறித்து, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கூறியதாவது:பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும்வேட்பாளராக இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பாஜ கட்சியின் மற்றும் நாட்டின் பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளர் நரேந்திர மோடி மட்டுமே. மக்கள் ஆசியுடன் மீண்டும் மோடி பிரதமராக … Read more

2022-க்கு குட் பை… 2023-க்கு வெல்கம்… !உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. உற்சாகத்துடன் மக்கள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாடங்களின் போது எந்த விதமாக சட்ட விரோத செயல்களோ அசம்பாவிதங்களோ நடைபெறுவதை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை பலவிதமான கட்டுபாபடுகளை விதித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் … Read more

மச்சானை ஓட ஓட விரட்டி அறிவாளால் வெட்டிய மாப்பிள்ளை.!

சேலம் மாவட்டத்தில் மச்சானை ஓட ஓட விரட்டி மாப்பிள்ளை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் முனியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி கங்காதரன்(30). இவர் தாரமங்கலம் சர்க்கரை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த சந்தானகோபால்(38) என்பவருக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைத்தார். ஆனால் சந்தனகோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதையறிந்த கங்காதரன் சந்தானகோபாலை கண்டித்துள்ளார். இதனால் … Read more

இன்று முதல் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் கட்டாயம்..! எங்கு தெரியுமா ?

இந்த 6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சோதனை நடத்தப்பட வேண்டும். அதில், கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகேஇந்தியாவுக்கான விமானப் பயணத்தை பயணிகள் மேற்கொள்ள வேண்டும்.இந்த நடைமுறை இன்று முதல் … Read more

குட் நியூஸ்..!! பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்..!! அமைச்சரின் பதில்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவதாகும். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ளது. இன்னும் இந்த திட்டத்தை திமுக தொடங்கவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை எல்லாம் காற்றில் எழுதப்பட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று திமுக அரசு அமைந்த முதல் ஆண்டே தமிழகத்தின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6 மாதத்துக்கு … Read more