வடகிழக்கு பருவமழை நிறைவு – 17 மாவட்டங்களில் மழை குறைவு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த காலகட்டத்தில் வழக்கமான அளவான 44 செமீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்துக்கு கடந்த அக். 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்.1 முதல் டிச.31 வரை வடகிழக்கு பருவமழைக் காலமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் நிறைவடைந்தது. வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் 44.3 செமீ மழை கிடைக்கும். கடந்த ஆண்டு 44.5 செமீ (வழக்கத்தை … Read more

காஷ்மீரில் 2022-ல் 56 பாகிஸ்தானியர் உட்பட 186 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் நேற்று கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 186 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 56 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 159 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளோம். மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சிறப்பான பணியைச் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்குவதற்கான சரியான பாதையில் போலீஸாரும், இதர பாதுகாப்புப் படையினரும் சென்று கொண்டிருக்கினறனர். 146 பாகிஸ்தான் … Read more

600 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் 95 வயதில் மறைவு

வாடிகன் சிட்டி: முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் (95) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப்பின், போப்பாக பதவியேற்றவர் 16-ம் பெனடிக்ட். இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தார். ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றிய இவர் கடந்த 1945-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் இவர், ஜெர்மனியில் இறையியல் பாடம் கற்பித்தார். கடந்த 1977-ம் … Read more

புத்தாண்டை ஒட்டி வானில் தோன்றிய அதிசயம்… சேலம் அருகே மக்கள் செம சர்ப்ரைஸ்!

உலகம் முழுவதும் புத்தாண்டு 2023 பிறந்துவிட்டது. இதை பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். வான வேடிக்கைகள் ஒருபுறம், வாழ்த்து செய்திகளின் பரிமாற்றம் மறுபுறம் என உற்சாகம் கரைபுரண்டு ஓடி வருகிறது. மேலும் புத்தாடைகள் உடுத்தி இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர். வானில் நிகழ்ந்த அதிசயம் இந்த சூழலில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக தமிழகத்தில் உள்ள சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானில் நிகழ்ந்த அதிசயம் பெரும் கவனம் பெற்றுள்ளது. அதாவது நட்சத்திரங்கள் ரயில் பெட்டிகள் போன்று … Read more

Earthquake in Delhi : புத்தாண்டின் முதல் நாளில் டெல்லியில் நிலநடுக்கம் ; 2023-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்

Earthquake in Delhi : தலைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. ” ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 … Read more

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் தலைமையில் கோவிட் பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை.!

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர் தலைமையில் கோவிட் குறித்த முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துக் கொண்டனர்.  சீனா உள்பட 6 நாடுகளில் கோவிட் பரவல் அதிகமாக உள்ள சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. டிசம்பர் மாதத்தில் கோவிட் பாதிப்புகளுடையவர்களின் 500 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  Source link

ஒரே வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் பலி! புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலியாகினர். புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், நட்சத்திர விடுதிகளில் நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடினர். இளைஞர்கள் பலர் இரு சக்கர வாகனத்தில் சுற்றி புத்தாண்டை வரவேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தில் நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகினர். ஒரே வாகனத்தில் சென்ற இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாட ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று … Read more

புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு விஸ்வரூப சிறப்பு தரிசனம் அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது; சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமியின் பிரசங்கத்துடன் நடைபெற்றது.

புடினுக்கு எதிராக பதாகை ரஷ்ய முதியவர் ஒடிசாவில் மாயம்: போலீசார் மறுப்பு

புவனேஸ்வர்: ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரான வாசகங்களுடன் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் சுற்றி வந்த முதியவர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை போலீசார் மறுத்துள்ளனர். “நான் உக்ரைன் போருக்கு எதிரானவன், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரானவன், வீடு இல்லாமல் உள்ள என்னை காப்பாற்றுங்கள்” என்று எழுதிய பதாகையுடன் ஒடிசா, புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் ரஷ்ய முதியவர் ஒருவர் சுற்றி வந்தார். அவர் திடீரென்று மாயமாகி விட்டதாக தகவல்கள் வௌியானது. ஏற்கனவே, ரஷ்ய அதிபர் புடினை … Read more