வேட்பாளராக யாரும் இருக்கலாம் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராவார்: அசாம் முதல்வர் அதிரடி

புதுடெல்லி: ‘‘2024ல் மீண்டும் பிரதமர் ஆகப் போவது நரேந்திர மோடிதான்’’ என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அளித்த பேட்டி குறித்து, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கூறியதாவது:
பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும்வேட்பாளராக இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பாஜ கட்சியின் மற்றும் நாட்டின் பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளர் நரேந்திர மோடி மட்டுமே. மக்கள் ஆசியுடன் மீண்டும் மோடி பிரதமராக வருவார். அவருக்கு அடுத்த இடத்தில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை யார் பெறுவார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. டெல்லி குளிரில் ஸ்வெட்டர் அணியாததை பற்றி ராகுல் பேசுகிறார்.

அவர்களின் காங்கிரஸ் ஆட்சியால் நாட்டின் இன்னும் ஏராளமான மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களால் போர்வை, கம்பளி போன்றவற்றை வாங்க முடியாது. ராகுலிடம் எல்லாம் இருந்தும் அவர் அணியவில்லை. இதுதான் இரண்டுக்கும் வித்தியாசம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.