ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, அத்தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமார் வேட்புமனுக்களை பெற்றார். … Read more

திருவள்ளுவர் வழியில் செல்லும் மோடி அரசு – நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

புதுடெல்லி: பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் பாதையை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆதிசங்கரர், பசவேஸ்வரர், திருவள்ளுவர், குருநானக் தேவ் போன்ற மகான்கள் காட்டிய வழியைப் பின்பற்றும் அதே வேளையில், மறுபுறம் ஹைடெக் அறிவு மையமாக இந்தியாவை மத்திய அரசு மாற்றி வருகிறது என்று நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முஉரையுடன் … Read more

முக்கிய கட்டத்தில் உக்ரைனை கைவிடும் பிரித்தானியா: புடினுக்கு கோபமூட்டும் செயல் என அச்சம்

ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என்ற உக்ரைனின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரிக்கும் என பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. நடைமுறை சாத்தியமல்ல தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறை சாத்தியமல்ல எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், @lockheedMartin உக்ரைனுக்கு RAF Typhoon மற்றும் F-35 போர் விமானங்களை வழங்குவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை எனவும், தொடர்புடைய விமானங்களை இயக்க உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி … Read more

கோயில்களை லாபம் பார்க்கும் இடமாக மாற்றக்கூடாது: போலி இணையதள வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பிரபல கோயில்கள் பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டது பற்றிய மனுக்களை விசாரித்த ஐகோர்ட் கிளை, ‘கோயில்களை லாபம் பார்க்கும்  இடமாக மாற்றுவதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் என பிரபல கோயில்களின் பெயர்களில் செயல்படும் போலி இணையதளங்களை முடக்கவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ஐகோர்ட் கிளையில் … Read more

தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்

மும்பை: எனது படங்கள் தொடர் தோல்வி கண்டதால் ஓட்டல் தொழிலை தொடங்கலாம் என்றும் சினிமாவை விட்டு விலகலாம் என்றும் முடிவு செய்தேன் என்றார் ஷாருக்கான். 4 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் இந்தி படம், உலகம் முழுவதும் 5 நாளில் ரூ.543 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஷாருக்கான் பேசியது: எனது படங்களால் அன்பைத்தான் விதைக்கிறேன். உங்கள் அன்புக்காக ஏங்கித்தான் படங்களில் நடிக்கிறேன். … Read more

புடவையில் விளையாடிய சிறுமி கழுத்து இறுக்கி பரிதாப பலி| A girl who was playing in a sari died a tragic death by strangling her neck

அனுப்பூர், மத்திய பிரதேசத்தில், 7 வயது சிறுமி புடவையில் விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அனுப்பூர் மாவட்டம் பஹாரியா கிராமத்தில் வசித்த 7 வயது சிறுமி, தன் வீட்டிற்கு வெளியே உள்ள சுவரில் தொங்க விடப்பட்டு இருந்த புடவையில் நேற்று விளையாடினார். அப்போது எதிர்பாராத வகையில், புடவைசிறுமியின் கழுத்தை இறுக்கி சுற்றியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு … Read more

திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல்

விக்ரம் படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தில் அவருடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது திருப்பதிக்கு அருகே உள்ள … Read more

பொருளாதாரம், அரசியல் அர்ப்பணிப்பு; மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பொருளாதாரம், அரசியல் அர்ப்பணிப்பு; மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Source link

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியில் முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த கொலை முயற்சி வழக்கில் சசிகுமார் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அதன் பின்னர், சுரேஷ் உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து சசிகுமாரை பதிலுக்கு கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் படி, … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு – இதுவே இறுதி கெடு என அமைச்சர் அறிவிப்பு

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணைஇணைப்பதற்கான அவகாசம் வரும்15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவகாசம் வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த அவகாசத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மின்நுகர்வோர் மின் … Read more