உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் என்னால் நிறுத்த முடியும்! முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்


அமெரிக்காவின் ஜனாதிபதியாக இப்போது இருந்திருந்தால், உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் நிறுத்தியிருப்பேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களை கடந்துள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் இந்த போரை கையாண்டதை டிரம்ப் பலமுறை கண்டித்துள்ளார்.

குறிப்பாக, நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் போரை நடக்கவிட்டிருக்க மாட்டேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

டொனால்டு டிரம்ப்/Donald Trump

புதிய கொள்கை வீடியோ

இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பைடனை குறிப்பிட்டு உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய கொள்கை குறித்த வீடியோவில் அவர் கூறுகையில், ‘உக்ரைன் போரில் டாங்கிகளை அனுப்புவதன் மூலம் அணுசக்தி போரை பைடன் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் போர் ஒருபோதும் நடந்திருக்காது… ஒரு மில்லியன் ஆண்டுகளில் நடந்திருக்காது.

உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் என்னால் நிறுத்த முடியும்! முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் | Trump Says If He Is President End War Of Ukarine

ஆனால் இப்போது கூட நான் ஜனாதிபதியாக இருந்தால், இந்த பயங்கரமான மற்றும் வேகமாக அதிகரித்து வரும் போரை 24 மணி நேரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அதனை நடத்த முடியும்.

உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் என்னால் நிறுத்த முடியும்! முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் | Trump Says If He Is President End War Of Ukarine

நீங்கள் சரியான விடயங்களை சொல்வதற்கு பதிலாக தவறான விடயங்களை சொல்லக் கூடாது.

ரஷ்யாவைப் போருக்கு அழைத்துச் செல்ல நாங்கள் உதவினோம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நாட்டின் ஒரு சிறிய பகுதியை எடுத்துக் கொண்டால் பரவாயில்லை. மனித வாழ்வின் சோகமான கழிவு’ என தெரிவித்துள்ளார்.  

ஜோ பைடன்/Joe Biden



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.