'கலைஞரின் பேனா சிலையை உடைப்பாரா'..? சீமானுக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

மெரினாவில் கலைஞருக்கு பேனா சிலை அமைத்தால் அந்த சிலையை உடைப்பேன் என்று
சீமான்
கூறியதற்கு பேனா சின்னத்தை ஆதரிப்பவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அமைச்சர் சேகர் பாபு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, சீமான் சிலையை உடைத்தால் எங்கள் கைகள் பூப்பறித்து கொண்டிருக்குமா? எங்களுக்கும் கை இருக்கு” என்றும் இந்த ஒரு பதிலே அவருக்கு போதுமானது என்றும் அமைச்சர் கூறினார். ஆனால், சுற்றுசூழல் குறித்து சீமான் கூறிய கேள்விகளுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளிக்காமல் கடந்து சென்றார்.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்களிடமும் பேனா விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பு வேட்பாளராக செந்தில்முருகனை அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கலைஞரின் பேனா சின்னம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், கலைஞரின் பேனா சின்னதை உடைப்பேன் என்று பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பேச்சு கண்டனத்துக்குரியது. எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

நேற்றைய தினம் திருவல்லிக்கேணியில் அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் கற்களை கொட்ட வேண்டும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பள்ளிக்கூடங்களை சீரமைக்க பணம் இல்லை பேனா சின்னத்துக்கு எங்க இருந்து காசு வருது. பேனா சின்னம் வைக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அறிவாலயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், கடலில் வைப்பதை அனுமதிக்க முடியாது என்றார். அப்போது திமுகவினர் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அதற்கு பதிலடி கொடுத்த சீமான், ”உங்களுக்கு எதை பத்தியும் கவலை இல்லை. உங்களை கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு; நீ பேனாவை வை, ஒருநாள் நான் வந்து உடைப்பேன் என்று ஆவேசமாக பேசியது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.