குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில் தாலி கட்டி திருமணம் செய்த மணப்பெண்!


அம்மா, தாத்தா, பாட்டி, சகோதரன் உட்பட குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில், நடந்தது எதுவும் தெரியாமல் மணப்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஆஷிர்வாத் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது தெரியாமல், சுவாதி என்ற பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தான அது.

குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில் தாலி கட்டி திருமணம் செய்த மணப்பெண்! | Bride Married Her Family Burn To Death Jharkhand

சுவாதி தனது குடும்பத்தினருடன் ஜோராபடக்கில் உள்ள ஆஷிர்வாட் கோபுரத்தின் நான்காவது மாடியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார், அங்கு செவ்வாய்க்கிழமை மாலை தீப்பிடித்து 14 பேர் உயிரிழந்தனர்.

மாலை 4 மணியளவில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தி விநாயக் ரிசார்ட் திருமண அரங்கிற்கு ஸ்வாதி வீட்டிலிருந்து புறப்பட்டார்.

அவரது தந்தை சுபோத் லால், அவரது தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் இன்னும் பிளாட்டில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர், மாலை 6.15 மணியளவில் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், சுவாதியின் குடும்பத்தில் தாயார் மற்றும் அவரது தாத்தா பாட்டி மற்றும் சகோதரன் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

திருமண மேடையில் இருந்த சுவாதி தனது தாய் மற்றும் தாத்தா பாட்டியைப் பற்றி தொடர்ந்து கேட்டபோதும் திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்தது.

உண்மையில், நடந்த சோகத்தைப் பற்றி அவரிடம் உடனடியாக கூறப்படவில்லை.

பின்னர், தீயிலிருந்து தப்பிய அவரது தந்தை மட்டும் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவர் அதிர்ச்சியில் இருந்ததால், அவரால் சடங்குகளில் பங்கேற்க முடியவில்லை. வேறு சில குடும்ப உறுப்பினர்கள் சடங்குகளை முடித்தனர்.

திருமணம் முடிந்த பிறகு நடந்த விடயங்களை மணப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சுவாதி மனமுடைந்து சோகத்தில் ஆழ்ந்தார்.

55 வயதான தந்தை லால், தன்பாத் நகரில் உள்ள புரானா பஜாரில் மொத்த அழகுசாதனப் பொருள் கடை நடத்தி வருகிறார். கிரிதியில் வசிக்கும் சவுரவ் என்பவரை சுவாதி திருமணம் செய்து கொண்டார். பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.