டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் பரவலாக சிஎன்ஜி எரிபொருள் கொண்டு செயல்படும் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை உயரந்து வரும் நிலையில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரில் சிஎன்ஜி வசதி உள்ள மாடலை ரூ. 13.23 லட்சத்தில் வெளியிட்டுள்ளது.

பெட்ரோலில் இயங்கும் மாடலுடன் ஒப்பிடுகையில், Hyryder CNG விலை ரூ.95,000 கூடுதலாகும். மாருதி கிராண்ட் விட்டாராவுக்குப் பிறகு சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட இரண்டாவது நடுத்தர அளவிலான எஸ்யூவி ஹைரைடர் ஆகும்.

அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

ஹைரைடர் சிஎன்ஜி மாடலுக்கு எர்டிகா மற்றும் XL6 போன்ற மாருதிகார்களில் இடம் பெற்றுள்ள அதே 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர், K12C என்ஜினை கொண்டுள்ளது. பெட்ரோல் பயன்முறையில், இன்ஜின் 103hp மற்றும் 136Nm வெளிப்படுத்தும் நிலையில், CNG மாடலில் பவர் 88hp மற்றும் 121.5Nm  டார்க் ஆக குறைந்துள்ளது. பெரும்பாலான சிஎன்ஜி மாடல்களை போல, ஹைரைடர் சிஎன்ஜியும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது, மேலும், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி 26.6 கிமீ ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு வழங்கும் என டொயோட்டா குறிப்பிட்டுள்ளது.

டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவி மாடலில் C-வடிவ டெயில்-லைட் கொண்டுள்ளது, இது இரட்டை C-வடிவ பார்க்கிங் விளக்குகளுடன் டெயில்கேட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குரோம் பாகம் மையத்திலிருந்து டெயில்-லேம்ப்களுடன் இணைகிற மத்தியில் டொயோட்டா லோகோ கொண்டுள்ளது.

பெட்ரோல் Hyryder E, S, G மற்றும் V டிரிம்களில் வழங்கப்படுகிறது. ஹைரைடர் சிஎன்ஜி, S மற்றும் G டிரிம்களில் மட்டுமே வழங்கப்படும். மாருதி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி எஸ்யூவி உடன் ஒப்பீடுகையில் ரூ.45,000 வரை விலை கூடுதலாக ஹைரைடர் சிஎன்ஜி விலை அமைந்துள்ளது.

Hyryder Price

Hyryder S – ரூ.13.23 லட்சம்

Hyryder G – ரூ.15.29 லட்சம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.