தாழமுக்கம் இலங்கையின் கரையை அடையக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.

 2023 பெப்ரவரி02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2023பெப்ரவரி 01ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்படுகின்ற தாழமுக்கம் 2023 இன்று பெப்ரவரி01ஆம் திகதிகாலை வடஅகலாங்கு 8.20 N இற்கும்கிழக்கு நெடுங்கோடு 82.60 E இற்கும் அருகில்  மட்டக்களப்புக்கு கிழக்கு- தென்கிழக்காக 110 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது.

அதுமேற்கு – தென்மேற்குத் திசையில் நகர்ந்து இன்று 2023 பெப்ரவரி 01ஆம் திகதி நண்பகல் இலங்கையின் கரையை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமானவானம்காணப்படுவதுடன், வடக்கு,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு,வடமத்திய, கிழக்கு,மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.