நாடாளுமன்றத்தில், 2023-2024ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல்..

மத்திய பொது பட்ஜெட் தாக்கல்

“அனைவருக்குமான பட்ஜெட் இதுவாகும்”

“இந்தியா சரியான பாதையில் செல்கிறது”

“ஜொலிக்கும் நட்சத்திரமாக இந்திய பொருளாதாரம் “

“இந்திய பொருளாதாரம் 5ம் இடத்திற்கு முன்னேற்றம்”

image

“உணவு தானிய விநியோகம்: ரூ.2 லட்சம் கோடி”

“11.40 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி”

“9 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு”

“டிஜிட்டல் வடிவில் மத்திய பட்ஜெட் தாக்கல்”

“உலக நாடுகள் பாராட்டும் இந்திய பொருளாதாரம்”

“5ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா”

image

“பட்ஜெட்டில் 7 அம்சங்களுக்கு முன்னுரிமை”

“தனிநபர் வருமானம் 2 மடங்கு உயர்வு”

image

நாடாளுமன்றத்தில், 2023-2024ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல்

நாட்டின் 75ஆவது அமிர்த பெருவிழாவின் முதல் பட்ஜெட் தாக்கல் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இது இருக்கும் – நிர்மலா சீதாராமன்

கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு, இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது

உலகளவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட மிக முக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது

உலக நாடுகள் இந்திய பொருளாதாரத்தை ஒளிரும் நட்சத்திரமாக பார்க்கின்றன

ஜி-20க்கான இந்தியாவின் தலைமை நாம் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதற்கான மிக முக்கிய வாய்ப்பாகும்

கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 10ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இலவச கழிவறைகள் கட்டும் திட்டம், இலவச சமையல் எரிவாயு உள்ளிட்ட திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளன

உணவு தானிய விநியோகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

image

உழவர் நல நிதி உதவித் திட்டத்தின் கீழ், 11.40 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது

உஜ்வாலா திட்டத்தின் கீழ், 9 கோடி ஏழை-எளிய மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கோடு, உட்கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது

ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ், 44.60 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு சென்றடைந்துள்ளது

மத்திய அரசின் நடவடிக்கைகளால் தனிநபர் வருமானம் 2 மடங்கு உயர்ந்துள்ளது

உணவு(ஸ்ரீ அண்ணா) உற்பத்தியில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது

சிறுதானிய உற்பத்தியில் இந்தியாவை, உலகளவிலான உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை

விவசாய துறையில் புதிய ஸ்டார்ட்அப்களை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது

image

நாட்டில் உள்ள மீனவர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

மீனவர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க, வேளாண்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

image

நாடு முழுவதும் குழந்தைகள், சிறார்கள், இளையோர் பயன்பெறும் வகையில், டிஜிட்டல் நூலகம் தொடங்கப்படும்

நாடு முழுவதும் டிஜிட்டல் நூலகங்கள் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழிகளிலும் அமைக்கப்படும்

image

ICMR நிறுவனங்கள் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

பழங்குடியினர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

நாட்டின் பல்வேறு துறைகளில் மூலதன முதலீடுகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும்; இதற்காக ரூ.1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு

“ரயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு”

image

ரயில்வே துறையில் புதிய பாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு

“நகர உட்கட்டமைப்புக்கு ரூ.10,000 கோடி”

நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

மேலும் 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள்

மேலும் 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது

“நாடு முழுவதும் டிஜிட்டல் நூலகங்கள்”

image

“11.70 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன”

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நிதி வழங்க ரூ.2.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

image

கழிவுகளை அகற்ற 100% இயந்திரங்கள்

கழிவுகளை மனிதர்கள் அகற்றும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, கழிவுகளை அகற்ற 100% இயந்திரங்கள் பயன்படுத்த நடவடிக்கை

3 கல்வி நிறுவனங்களில் AI சிறப்பு மையங்கள்

நாட்டில் 3 உயர் கல்வி நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு செயற்கை நுண்ணறிவு(AI) நுட்ப சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்

“சேவைகளை பெற PAN & ஆதார்”

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், சேவைகளை பெற PAN & ஆதார் ஆகியவை அடையாள ஆவணங்களாகின்றன

image

“போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி”

நாட்டில், சாலை உள்ளிட்ட போக்குவரத்துத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.75,000 கோடி ஒதுக்கீடு

“இ-நீதிமன்றங்களுக்கு ரூ.7,000 கோடி”

நாட்டின் நீதித்துறையின் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், இ-நீதிமன்றங்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

“மாற்று எரிசக்திக்கு ரூ.19,700 கோடி”

கச்சா எண்ணெய் உள்ளிட்ட படிம எரிபொருள் திட்டங்களுக்கு மாற்றாக, மாற்று எரிபொருள் திட்டங்களுக்கு ரூ.19,700 கோடி ஒதுக்கீடு

image

“பசுமை எரிசக்தி மேம்பாட்டிற்கு ரூ.35,000 கோடி”

CNG உள்ளிட்ட பசுமை எரிசக்தி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு

“1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள்”

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், 1 கோடி விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்

image

லடாக்கில் ரூ.27,500கோடியில் பசுமை எரிசக்தி ஆலை

சூரிய ஒளி ஆற்றல் உள்ளிட்ட பசுமை எரிசக்தி ஆலை ரூ.27,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்

பழைய வாகன ஒழிப்புக்கு கூடுதல் நிதி

மாசு ஏற்படுத்தும் மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்து வாகனங்களை மாற்ற நடவடிக்கை – கூடுதல் நிதி ஒதுக்கீடு

“இளையோர் மேம்பாடு ரூ.10,000 கோடி”

இளையோர் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

“47 லட்சம் இளையோருக்கு திறன் பயிற்சி”

நாட்டில் 47 லட்சம் இளையோர் மேம்பாடு அடையும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி

 “MSME கடன் உத்தரவாத திட்டம்: ரூ.9000 கோடி”

சிறு, குறு நிறுவனங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9000 கோடி

 “மூத்தோர் சேமிப்பு வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு”

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு

“7.5% வட்டியில் மகளிர் சிறுசேமிப்புத் திட்டம்”

7.5% வட்டியில் மகளிருக்கான சிறுசேமிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்

பெண்களின் பெயரில் 2 ஆண்டுகளில், ரூ.2 லட்சம் முதலீடு செய்யும் வகையில் 7.5% வட்டியில் சிறுசேமிப்புத் திட்டம்

“ஜிடிபி நிதிப் பற்றாக்குறை 5.9%”

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறியீடான GDP-யில் நிதி பற்றாக்குறை என்பது 5.9%ஆக இருக்கும்

வருங்காலத்தில் GDP-யில் நிதிப் பற்றாக்குறையை 4.5%க்கு கீழ் குறைக்கும் வகையில் நடவடிக்கை

“இறக்குமதி லித்தியம் பேட்டரிகளுக்கு வரிவிலக்கு”

மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க அடிப்படை வரி விலக்கு

“மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு”

லித்தியம் பேட்டரி உள்ளிட்ட மின்சார வாகன உற்பத்தி பொருட்களுக்கான சுங்க வரி குறைப்பால், இ-வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு

“கிச்சன் சிம்னி சுங்க வரி 15%ஆக அதிகரிப்பு”

இறக்குமதி கிச்சன் சிம்னிகளுக்கான சுங்க வரி 7.5%லிருந்து 15%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

image

“தங்கம், வெள்ளி சுங்க வரி உயர்கிறது”

இறக்குமதி தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான சுங்க வரி உயர்கிறது; இதனால், தங்கம், வெள்ளியின் விலை மேலும் உயர வாய்ப்பு

6.50 கோடி பேர் வருமானவரித்தாக்கல்

நாட்டில் நடப்பு நிதியாண்டில், 6.50 கோடி பேர் வருமானவரித் தாக்கல் செய்துள்ளனர்

“சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,000 கோடி”

கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை பெற ஏதுவாக, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,000 கோடி வரிச்சலுகை

image

சிகரெட்டுகளுக்கான விலை உயர்கிறது.!

புகையிலை பொருட்கள் மீதான வரி 16% உயர்கிறது; இதனால், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை அதிகரிக்கும்

வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு

புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு

வருமான வரி செலுத்தும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு

7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை

ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை வருமானம் பெறுகிறவர்கள் ரூ.45,000 வரி செலுத்தினால் போதுமானது.

 

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

உலக அளவில் இந்தியாவில்தான் அதிக பொருளாதார வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதால் உலக அளவில் இந்திய பொருளாதாரம் வலுவடையும்

இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்குமான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்

கொரோனா பரவல் காலத்தில் 80 கோடி மக்களுக்கு 28 மாதங்கள் இலவசமாக உணவு தானியங்கள் அளிக்கப்பட்டது

கொரோனா பரவல் காலத்தில் பட்டினியால் மக்கள் வாடாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது

பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்கிறது

இந்திய பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்கிறது, நல்ல எதிர்காலம் நமது பொருளாதாரத்திற்கு உள்ளது

உணவு தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது

100 ஆண்டு காலத்திற்கான புளூபிரிண்ட் பட்ஜெட்

இந்தியாவின் அடுத்த 100 ஆண்டு காலத்திற்கான புளூபிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்

தனி நபர் வருமானம் 2 மடங்கு அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உள்ளது

5-வது பொருளாதார நாடாக முன்னேறியது இந்தியா

கடந்த 9 ஆண்டுகளில் உலக அளவில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது

75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், இந்தியாவை உலக நாடுகள் ஒளிரும் நட்சத்திரமாக அங்கீகரித்துள்ளன

கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதும், இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை

இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்த துரித கதியில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

இலவச உணவு தானியங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.2 லட்சம் கோடியாக ஜனவரி 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அதிகரித்துள்ளது

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், புதிய வேலை வாய்ப்பு உருவாக்குதல் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

பசுமை விவசாயத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம்

பசுமை எரிசக்தி, பசுமை விவசாயத்திற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது

விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க புதிய நிதி தொகுப்பு ஏற்படுத்தப்படும்

157 புதிய நர்சிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்

நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்

2014 ஆம் ஆண்டு முதல் ஏற்கனவே நாடு முழுவதும் 157 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன

ரூ.20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு

கால்நடைகள் நலன் மற்றும் மீன்வளத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விவசாய கடன்

ரூ.20 லட்சம் கோடிக்கு விவசாய கடன் அளிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

கிராமப்புற பகுதிகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க அரசு உறுதுணையாக இருக்கும்

சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி

சுய உதவி குழுக்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை பெறுவதற்கு அரசு நிதி உதவி அளிக்கும்

மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு ரூ.6,000 கோடி

மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி

மத்திய பட்ஜெட்டில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு

 

38,800 ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை

அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா மாதிரி பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

ஏகலைவா மாதிரி பள்ளிகள் மூலம் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி அளிக்க திட்டம்

வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79,000 கோடி நிதி

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியை 66% மத்திய அரசு அதிகரித்து உள்ளது

image

50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விமான வசதியை அளிக்கும் வகையில் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்

புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிபேடுகள், டிரோன் தளங்கள் ஏற்படுத்தப்படும்

பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ.15,000 கோடி நிதி

பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது

இந்த திட்டத்திற்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கப்படும்

KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படும்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம்

KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படும்

டிஜி லாக்கர் மூலம் முகவரி, அடையாள ஆவணங்களை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்

மாநில அரசுகளுக்கு கடன் வழங்கம் திட்டம் நீட்டிப்பு

மாநில அரசுகளுக்கு வட்டியில்லாமல் 50 ஆண்டுகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய நீட்டிக்க முடிவு

நூலகங்கள் அமைக்க மாநில அரசுகளுக்கு ஆதரவு

பஞ்சாயத்துகள் மற்றும் வார்டு அளவில் புதிதாக நூலகங்களை மாநில அரசுகள் அமைப்பதை மத்திய அரசு ஊக்குவிக்கும்

புதிய நூலகங்கள் அமைப்பதற்கு தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி தரும்

image

5ஜி – 100 ஆய்வு கூடங்கள்

நாடு முழுவதும் 5ஜி சேவையை பயன்படுத்தும் விதத்தில் செயலிகளை உருவாக்க 100 ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்

500 கழிவு மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்படும்

நாடு முழுவதும் 500 கழிவு மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்படும்

தொழில் நிறுவனங்களுக்கு PAN கட்டாயம்

தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் PAN கட்டாயம்

10,000 பயோ ரிசோர்ஸ் மையங்கள்

அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 பயோ இன்புட் ரிசோர்ஸ் மையங்கள் அமைக்கப்படும்

இயற்கை விவசாயம் :1 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க திட்டம்

image

சுற்றுலாவை மேம்படுத்த தனி செயலி அறிமுகம்

சுற்றுலாவை மேம்படுத்த நாடு முழுவதும் 50 புதிய நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

எல்லையோர கிராமங்களில் சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கை

சுற்றுலாவை மேம்படுத்த தனி செயலி புதிதாக அறிமுகப்படுத்தப்படும்

ஹைட்ரஜன் மிசன் – ரூ.19,700 கோடி

தேசிய ஹைட்ரஜன் மிசன் திட்டத்திற்கு ரூ.19,700 கோடி நிதி ஒதுக்கப்படும்

2030 ஆம் ஆண்டுக்குள் ஹைட்ஜன் உற்பத்தியை 50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு

தேசிய தொழில் பயிற்சியாளர் திட்டம் அறிமுகம்

தேசிய தொழில் பயிற்சியாளர் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்

3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

பயோ எரிவாயுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு

பயோ எரிவாயுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

image

செல்போன் பாகங்கள், டிவி பேனலுக்கு வரி சலுகை

வரி சலுகையால் செல்போன், டிவி விலை குறைய வாய்ப்பு

டிவி பேனல்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5% ஆக குறைப்பு

இறக்குமதியாகும் செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது

அடிப்படை சுங்க வரி விதிப்பு 23%ல் இருந்து 13% ஆக குறைப்பு

வரி சலுகையால் செல்போன், டிவி விலை குறைய வாய்ப்பு

சைக்கிள், பொம்மை இறக்குமதி வரி குறைப்பு

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது

image

பசு சார்ந்த பொருளாதார திட்டத்திற்கு ரூ.10,000 கோடி

பசு சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்த கோவர்தன் திட்டம் அறிமுகம் – ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு

ஐடி ரிட்டர்ன் எளிமையாக்கப்படும்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை எளிமையாக்கப்படும்

வருமான வரி கணக்கு தாக்கல் – நடவடக்கை எடுக்கும் நாட்கள் 93லிருந்து 16 ஆக குறைப்பு

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.