அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு 235 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 3 டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
