Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்ததாக இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது தெரிய வந்துள்ளது.
ஜெயிலர்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வெளியிட்ட கையோடு ரஜினியை இயக்கிக் கொண்டிருக்கிறார் நெல்சன். ஜெயிலர் படத்தில் ரஜினியை எப்படி வித்தியாசமாக காட்டப் போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயிலர் நல்லபடியாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிஜெயிலர் பட வேலையே முடியாத நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் நபர் குறித்து பேசப்படுகிறது. சிபி சக்ரவர்த்தி, கார்த்திக் சுப்புராஜ், ஞானவேல் உள்ளிட்டோர் ரஜினியிடம் கதை சொன்னதாக கூறப்பட்டது. ரஜினி அவரிடம் கதை கேட்டார், இவரிடம் கதை கேட்டார். அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இளம் இயக்குநர் தான் என தினமும் யாரின் பெயராவது அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
ஞானவேல்இளம் இயக்குநர்கள் வேண்டாம் என கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினி என்று கூட தகவல் வெளியானது. ஆனால் ரஜினியின் கவனம் எல்லாம் இளம் இயக்குநர்கள் மீது தான் இருக்கிறதாம். சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை எடுத்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்த ஞானவேல் சொன்ன கதை தான் ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம்.
தனுஷ்ஜெயிலரை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. ரஜினியை இயக்க எத்தனையோ இயக்குநர்கள் ஆசைப்படும் நேரத்தில் ஞானவேலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என அவரின் மூத்த மருமகனான தனுஷுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அந்த ஆசை மட்டும் நிறைவேறுவது போன்று தெரியவில்லை.
லால் சலாம்தனுஷுக்கு கிடைக்காத வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துவிட்டது. தான் இயக்கும் லால் சலாம் படத்தில் அப்பா ரஜினிகாந்தை நடிக்க வைக்கிறார். கவுரவத் தோற்றம் தான் என்றாலும் அப்பாவை இயக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா. லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
கெரியர்மகன்களுக்காக கெரியரில் இருந்து பிரேக் எடுத்த ஐஸ்வர்யா மீண்டும் படம் இயக்க வந்துவிட்டார். மகளின் இந்த முயற்சியை ஆதரிக்கும் வகையில் அவரின் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினி என்று கூறப்படுகிறது. இதற்கிடையே லால் சலாம் படத்தில் இருந்து ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி விலகிவிட்டார். இது குறித்து ட்வீட் செய்திருந்தார் அவர்.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா படத்தில் இருந்து திடீர்னு விலகிய பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி