இல்லத்தரசிகளுக்கு ஷாக்..!! 2 நாட்களில் 1096 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை..!!

தங்கத்தைப் பொறுத்தவரை விலை இவ்வளவு போகும் என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. அமெரிக்க ஃபெடரல் வங்கி எடுக்கக்கூடிய வட்டி விகித உயர்வு போன்ற முக்கியமான முடிவுகளைப் பொறுத்துதான் சர்வதேச தங்கத்தின் விலை நிர்ணயமாகும். இதைப் பொறுத்து இந்திய சந்தையில் தங்கத்தின் விலை நிர்ணயமாகும்.

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தங்கத்தின் விலை குறையும் என எதிர்ப்பார்த்த நிலையில், மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரியை அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இனி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 616 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 60 ரூபாய் உயர்ந்து, ரூ.5,475-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ரூ.43,880-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,436-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 49 ரூபாய் உயர்ந்து, ரூ.4,485-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் உயர்ந்து, ரூ.77,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ரூ.1,096 அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2020 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.43,360-க்கு விற்பனை செய்ததே உச்சமாக இருந்தது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.2,760 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.