சென்னை அயனாவரத்தில் 16 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாக அவருடைய தாய் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி தாயின் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய நிலையில் சிறுமி மறுநாளே வீட்டிற்கு வந்துள்ளார்.
பின் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமிக்கு கிளப் ஹவுஸ் ஆப் மூலமாக நிறைய நண்பர்கள் இருந்ததும் அப்படி ஒருவர் தான் நிஷாந்த் குமார் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலித்த நிலையில் இந்த காதலுக்கு சிறுமியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி நிஷாந்த் குமாருடன் சென்றுள்ளார் போகும்போது தாயின் செல்ஃபோனையும் அந்த சிறுமி எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் போலீஸ் பேசியதை தொடர்ந்து பயந்துபோன நிஷாந்த் குமார் சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வீட்டிற்கு வந்த பின்னும் சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிதீஷ் குமார் அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, செல்போனை ஆய்வு செய்தபோது சிறுமியிடம் நிஷாந்த் குமார் மிகவும் ஆபாசமாக பேசி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து காட்பாடியை சேர்ந்த நிஷாந்த் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து எட்டு மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தனி படை அமைத்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்தது பற்றி உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.