செங்குன்றத்தில் போலீஸ் தற்கொலை செய்துக் கொண்டது ஏன்? நீடிக்கும் மர்மம்?

சென்னை: சென்னை செங்குன்றத்தில் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  செங்குன்றம் அடுத்த வடகரை பாபா நகர் அனெக்ஸ் பகுதி சேர்ந்தவர் சதீஷ் 35. இவர் சென்னை ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீசாராக பணியாற்றி வந்தார். தனது பெற்றோருடன் வசித்துவந்த போலீஸ் சதீஷ் அப்பா அம்மாவுடன் தங்கி இருந்தார்.

நேற்று இரவு அவர் பிராந்தி பாட்டிலுடன் மயக்க நிலையில் இருந்தபோது கண்டறியப்பட்டார். அம்மா மலர் மணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே சதீஷ் பரிதாபமாக இறந்து கிடந்தார். அவர் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து எதனால் பிராந்தி பாட்டலுடன் விஷம் மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

காவல் பணியின் போது அதிகாரிகள் டார்ச்சரா அல்லது திருமணம் ஆகவில்லை என ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.