
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்,அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சில தினங்களாக இரண்டு யூடியூப் சேனல்களில் என்னை பற்றியும், எனது குடும்பத்தினரைப் பற்றியும் கலைத் துறையினரைப் பற்றியும் தவறாக சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக கற்பனை செய்திகளை தவறான நோக்கத்தில் தொடர்ந்து வீடியோவாக பதிவு செய்து வெளியிடப்பட்டு வருகிறது.
இது, எனது புகழுக்கு களங்கம் கற்பித்து தனிப்பட்ட முறையில் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என இரண்டு யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார் அளித்துள்ளார்.

திரைத்துறையினரை முகத்திரைக்கு பின்னின்று தவறாக சித்தரிக்கும் இது போன்ற யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளாா். நடிகா் சரத்குமாா் புகார் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.