டிக்கெட் வாங்கணுமா., குழந்தையே வேண்டாம்.! விமான நிலையத்திலேயே அனாதையாக விட்டுச்சென்ற தம்பதி


தம்பதியினர் தங்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்கியதால், குழந்தையை விமான நிலையத்திலேயே அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோதமான இந்த சம்பவத்தில், தம்பதியினர் தங்கள் குழந்தையை இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள விமான நிலைய செக்-இன் கவுண்டரில் கைவிட்டுவிட்டு, விமானத்தில் ஏறியுள்ளனர்.

இஸ்ரேலின் Ben Gurion சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு Ryanair விமானத்தில் இந்த தம்பதி புறப்பட இருந்தது.

கன்வேயர் பெல்ட் அருகே குழந்தை

டிக்கெட் வாங்கணுமா., குழந்தையே வேண்டாம்.! விமான நிலையத்திலேயே அனாதையாக விட்டுச்சென்ற தம்பதி | Couple Left Baby At Israeli Airport Board FlightPicture: Reuters and Mako

அவர்கள் விமான நிலையத்தை அடைந்தபோதுதான், ​​குழந்தைக்கும் டிக்கெட் வேண்டும் என்பதை அறிந்தனர். ஆனால் குழந்தைக்கு டிக்கெட் வாங்குவதற்குப் பதிலாக அல்லது விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக, குழந்தையை கன்வேயர் பெல்ட் அருகே Baby Car இருக்கையில் விட்டுவிட்டு, கடவுசீட்டு கட்டுப்பாட்டுக்கு சென்றனர்.

இதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸை தொடர்பு கொண்டனர்.

Ryanair desk மேலாளர், “நாங்கள் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை, நாங்கள் பார்த்ததை நம்ப முடியவில்லை.” என்று கூறினார்.

தம்பதியை விமானத்திலிருந்து இறக்கிய அதிகாரிகள்

இதையடுத்து பென் குரியன் விமான நிலையத்தில் உள்ள செக்-இன் முகவர் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தம்பதியை விமானத்திலிருந்து இறங்கவைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Ryanair-ன் இணையதளத்தின்படி, மடியில் எடுத்துச்செல்லும் குழந்தைக்கு டிக்கெட் கட்டணமாக 27 டொலர் வசூலிக்கப்படும். Baby Car இருக்கையுடன் விமானத்தில் ஏற்றிச்சென்றாலும் குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவேண்டும்.

இந்த விவகாரம் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், குழந்தை இப்போது பெற்றோரிடம் இருப்பதாகவும் இஸ்ரேல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.