பறக்கையில் புதிய நெல்கொள்முதல் நிலையம்: விவசாயிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையால் மாவட்ட நிர்வாகம் கடந்த சில வருடங்களாக 9 நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்கொள்முதல் செய்து வருகிறது. இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் ஒரு கிலோ நெல் ரூ.20.15க்கு கொள்முதல் ெசய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொடுத்து பணத்தை பெற்று வருகின்றனர். பறக்கை நெல்கொள்முதல் நிலையம் புத்தளத்தில் இயங்கி வந்தது. இதனால் பறக்கையில் 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் நெல் பயிர்களை அறுவடை செய்து புத்தளத்திற்கு கொண்டு செல்ல அவர்களுக்கு அதிக பணம் செலவு ஆனது.

இதனை தொடர்ந்து பறக்கையை சேர்ந்த விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையத்தை பறக்கையில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ரூ.12 லட்சம் செலவில் கடந்த ஆண்டு பறக்கை கால்நடை மருத்துவமனை அமைந்துள்ள வளாகத்தில் அமைக்கும் பணி தொடங்கியது. கடந்த கன்னிப்பூவின் அறுவடையின்போது புத்தளத்தில் இயங்கிய பறக்கை நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணி நடந்தது. பறக்கையில் அமைந்து வரும் நேரடி நெல்கொள்முதல் நிலைய பணிகள் முடிந்துள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகம் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த பறக்கை நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இது குறித்து பறக்கை விவசாயி பெரிய நாடார் கூறியதாவது: பறக்கை நெல் கொள்முதல் நிலையம் புத்தளத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. புத்தளத்திற்கு நெல்கொண்டு செல்வதால், வாகன வாடகை அதிகமாகி வந்தது. இதனால் பறக்கையில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நெல்கொள்முதல் நிலையத்தை பறக்கையில் அமைத்துள்ளது.

கும்பபூ அறுவடையில் கிடைக்கும் நெல்லை பறக்கை கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல்கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் வழிபாதைகளை பறக்கை விவசாயிகள் ஒருங்கிணைந்து செய்ய உள்ளோம். இதனால் வாகனங்கள் தடையின்றி நெல்கொள்முதல் நிலையத்திற்கு செல்லும். பறக்கையில் அமைக்கப்பட்டுள்ள நெல்கொள்முதல் நிலையம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.