பிரித்தானியாவில் 92 வயது மனைவியை கொன்ற 91 வயது முதியவர்!


பிரித்தானியாவில் 91 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.


குடியிருப்பில் சடலமாக கிடந்த மூதாட்டி

Weston-super-Mare நகரைச் சேர்ந்தவர் ஜான் வுட்பிரிஜிட்ஜ்(91). இவரது 92 வயது மனைவி அன்னே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்னேவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பிரித்தானியாவில் 92 வயது மனைவியை கொன்ற 91 வயது முதியவர்! | Man 91 Arrested In Uk For Kill His Wife

@Getty

அப்போது வுட்பிரிஜிட்ஜ் தான் அவரது மனைவியை கொன்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

திங்கட்கிழமை காலையில் அன்னே வுட்பிரிட்ஜ் தனது குடியிருப்பில் கொல்லப்பட்டு இருந்தார் என Avon மற்றும் Somerset பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் 92 வயது மனைவியை கொன்ற 91 வயது முதியவர்! | Man 91 Arrested In Uk For Kill His Wife

@Google maps

91 வயது முதியவர் கைது

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜான் வுட்பிரிட்ஜ் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார் என்று போர்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முதியவர் கொலை செய்ததற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

பிரித்தானியாவில் 92 வயது மனைவியை கொன்ற 91 வயது முதியவர்! | Man 91 Arrested In Uk For Kill His WifeSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.