பெஷாவர் மசூதி தற்கொலை படை தாக்குதல் சம்பவம்: 17 பேர் கைது| Peshawar Mosque Suicide Squad Attack: 17 Arrested

பெஷாவர் : பாகிஸ்தான் மசூதியில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில், சந்தேகத்துக்கு உரிய ௧௭ பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள மசூதியில் ஜன., ௩௦ம் தேதி நடைபெற்ற மதிய வேளை தொழுகையின் போது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியின் கூரை பெயர்ந்து விழுந்து பலத்த சேதமடைந்தது. இத்தாக்குதலில், 97 போலீஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் ௧௦௧ பேர் பலியாகினர். ஏராளமானோர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாகிஸ்தான் வரலாற்றிலேயே மிக கொடூரமான இத்தாக்குதல் சம்பவத்துக்கு, பாகிஸ்தான் தலிபான் என்றழைக்கப்படும் தெஹ்ரீக் தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தங்கள் அமைப்பின் கமாண்டர் கொல்லப்பட்டதற்கு, பழிக்குப் பழி நடவடிக்கை என தெரிவித்துள்ளது.

காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியின்போது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய நபரின் தலை மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ௧௭ பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தில் நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி, நேற்று பெஷாவரில் போலீஸ் துறையினர் போராட்டம் நடத்தி ஊர்வலமாகச் சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.