வீடு முழுக்க கையெறி குண்டுகளால் அலங்கரித்த பிரித்தானியர்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்


பயங்கரமாக வெடிக்கக்கூடிய குண்டுகள் என தெரியாமல் நபர் ஒருவர் தனது வீடு முழுக்க கையெறி குண்டுகளால் அலங்கரித்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டை குண்டுகளால் அலங்கரித்த நபர்

இங்கிலாந்தின் கார்ன்வால் மாவட்டத்தில் சம்மர்கோட் கிராமத்தில், ஜனவரி 31 (செவ்வாய்கிழமை) காலை 11.20 மணியளவில், ஒருவர் தான் மட்டுமின்றி அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள மக்களும் தேர்ந்து வெடித்து சிதறக்கூடிய அளவிற்கு ஒரு காரியத்தை செய்துள்ளார். ஆனால் நல்லவேளையாக அப்படியொரு அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து  நிறுத்தப்பட்டது.

அவர், தனது வீடு முழுக்க பயங்கரமாக வெடிக்கக்கூடிய சக்திவாய்ந்த கையெறி குண்டுகளால் அலங்கரித்துள்ளார்.

வீடு முழுக்க கையெறி குண்டுகளால் அலங்கரித்த பிரித்தானியர்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Uk Man Decorates House Hand Grenades Live Bomb

அவசர சேவைகள் அழைப்பு

அவரது வீட்டில் வெடிகுண்டுகள் இருப்பது பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து, அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. அப்பகுதியைச் சுற்றி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சம்மர்கோட் கிராமத்தில் மிகப்பாரிய பகுதி பொலிசாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, முக்கியமான சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன.

வீடு முழுக்க கையெறி குண்டுகளால் அலங்கரித்த பிரித்தானியர்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Uk Man Decorates House Hand Grenades Live BombImage: Louise Jones

வெடிக்கக்கூடிய கையெறி குண்டுகள்

டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிசார் பின்னர் அந்த நபர் தனது வீட்டை உண்மையான வெடிக்கக்கூடிய கையெறி குண்டுகளால் அலங்கரித்ததை உறுதிப்படுத்தினர். இறுதியில், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரால் அவை அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

விசாரணையில், கைக்குண்டுகளை ‘அலங்கார’ நோக்கங்களுக்காக மட்டுமே வாங்கியதாகவும், அவை உயிருள்ள குண்டுகள் என தெரியவில்லை என்றும் அந்த நபர் அதிகாரிகளிடம் விளக்கினார்.

வெடிபொருட்களை மதிப்பிடுவதற்கு பிரித்தானிய கடற்படையின் வெடிகுண்டு அகற்றல் (EOD) குழு அழைக்கப்பட்டது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.