அச்சமற்ற, சுதந்திரமான என் மகளுக்கு பிறந்தநாள்! அந்த விடயம் மாறாது என நம்புகிறேன்..ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவு


இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மகளுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Ella Grace

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மகள் Ella Grace Margaret இன்று தனது 14வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோ/Justin Trudeau-

@TheCanadianPress

தன் மகளின் பிறந்தநாளையொட்டி அவர் விளையாடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரூடோ பகிர்ந்துள்ளார்.

ட்ரூடோவின் வாழ்த்து

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ‘Ella Grace முதல் நாளில் இருந்தே ஆர்வம், அச்சமற்ற மற்றும் சுதந்திரமாக தான் தனது வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கிறார், அது மாறாது என்று நம்புகிறேன்.

இன்று அவளது பிறந்தநாள். மேலும் இளம்பெண்ணாக வளர்வதை நினைத்து நாம் பெருமைப்பட முடியாது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் Ella Grace’ என தெரிவித்துள்ளார்.

ட்ரூடோவின் இந்த பதிவினைக் கண்ட பலரும் Ella Grace-க்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.