அத்துமீறிய இளைஞரின் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்! பின்னர் நடந்த சம்பவம்


இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னிடம் அத்துமீறிய இளைஞரின் உதட்டை பெண்ணொருவர் கடித்து துப்பிய சம்பவம் நடந்துள்ளது.

துஷ்பிரயோக முயற்சி

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். அவர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றுள்ளார்.

அவரது பிடியில் இருந்து தப்பிக்க முடியாத அப்பெண், குறித்த இளைஞரின் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.

இதனால் அந்நபர் அலறி துடித்துள்ளார்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த இளைஞரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் அவரை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வைத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அத்துமீறிய இளைஞரின் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்! பின்னர் நடந்த சம்பவம் | Woman Bites Off Man Lips Who Tried Abuse Up

@Twitter/MeghUpadates


சிறையில் அடைப்பு

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், குறித்த இளைஞர் வயல் வேலைக்கு சென்ற அப்பெண்ணை பின் தொடர்ந்துள்ளார்.

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது சுதாரித்துக் கொண்ட இளம்பெண் முதலில் முத்தம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவரும் சரி என்று கூற முத்தம் கொடுக்கும்போது உதட்டை கடித்து துப்பியுள்ளார்.

பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்றியுள்ளனர். குறித்த பெண் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.