துருக்கி, சிரியா நாடுகளை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம் 2,300 பேர் பலியான பரிதாபம்; ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம்| 2,300 people died in the earthquake that shattered Turkey and Syria; Thousands of houses are ground level

அங்காரா,-மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகளால், 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில், ௯௦௦க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின.

இவற்றில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் இடையே அமைந்துள்ளது, மேற்காசிய நாடான துருக்கி. இதற்கு தெற்கே உள்ளது, அதன் அண்டை நாடான சிரியா.

துருக்கியின் தென் மேற்கே உள்ள காசியன்டெப்பை மையமாக வைத்து, நேற்று அதிகாலையில் இங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், ௭.௮ ஆக பதிவானது. இதன் தாக்கம் அண்டை நாடான சிரியாவின் வடக்கே உள்ள பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நேற்று மாலை அங்கு 50க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இவற்றில், ரிக்டர் அளவு களில், ௭.௫ மற்றும் ௬.௬ என,

தொடர்ச்சி 14ம் பக்கம்

இரங்கல்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பெரும் உயிர் சேதத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.’இந்த இக்கட்டான நேரத்தில் இந்த நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது’ என, தன் செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.