பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தும்கூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
