மாரடைப்பால் 27 நிமிடங்கள் உயிரைப் பிரிந்த உடல்: அமெரிக்கப் பெண்ணின் ஆச்சரிய அனுபவம்


மாரடைப்பு ஏற்பட்ட ஒரு பெண்ணின் உடலிலிருந்து அவரது உயிர் 27 நிமிடங்கள் பிரிந்த நிலையில், தான் கண்ட ஆச்சரிய காட்சியை விவரித்துள்ளார் அமெரிக்கப் பெண் ஒருவர்.

ஆச்சரிய அனுபவம்

2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், Tina Hinesக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கீழே விழுந்துள்ளார் அவர். அவரது கணவரான Brian மனைவிக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்க, கண் விழித்த Tina மீண்டும் நினைவிழந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலும் பல முறை நினைவிழந்த அவர், மொத்தம் 27 நிமிடங்கள் உயிரற்ற நிலையில் இருந்துள்ளார்.

தனது உயிர் தன் உடலில் இல்லாத நேரத்தில் தான் கண்ட ஆச்சரிய காட்சியை விவரித்துள்ளார் அமெரிக்காவின் அரிசோனாவில் வாழும் Tina.

மாரடைப்பால் 27 நிமிடங்கள் உயிரைப் பிரிந்த உடல்: அமெரிக்கப் பெண்ணின் ஆச்சரிய அனுபவம் | The Amazing Experience Of The American Girl

Credit: Facebook/It’s Real-Heaven

தன் உயிர் தன் உடலைப் பிரிந்த நேரத்தில், கைகளை விரித்தபடி இயேசுநாதர் நின்றதைத் தான் கண்டதாகவும், அவரைச் சுற்றி வெளிச்சம் பிரகாசித்ததாகவும் கூறும் Tina, தான் உயிரிழந்தாலும், தனக்கு பயமே ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கோமாவிலிருந்து எழுந்தபோது எழுதிய வார்த்தைகள்

Tinaவை கோமாவில் வைத்திருந்துள்ளார்கள் மருத்துவர்கள். கோமாவிலிருந்து எழுந்ததும், ஒரு காகிதத்தில் எதையோ எழுதியுள்ளார் Tina. அவர் எழுதிய வார்த்தைகள், ‘it’s real’, என்பதாகும். அதாவது, தான் கண்ட காட்சி உண்மையானது என அவர் எழுதியுள்ளார்.

மாரடைப்பால் 27 நிமிடங்கள் உயிரைப் பிரிந்த உடல்: அமெரிக்கப் பெண்ணின் ஆச்சரிய அனுபவம் | The Amazing Experience Of The American Girl

Credit: CBN

இதற்கிடையில், Tinaவுக்கு மூளை பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் Brianஇடம் கூறியுள்ளார்கள். ஆனால், மறுநாள் சாதாரண நிலைக்குத் திரும்பிவிட்டார் Tina. தற்போது, தனது உயிர் பிரிந்தபோது, தான் கண்ட ஆச்சரிய அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துவருகிறார் அவர்.
 

மாரடைப்பால் 27 நிமிடங்கள் உயிரைப் பிரிந்த உடல்: அமெரிக்கப் பெண்ணின் ஆச்சரிய அனுபவம் | The Amazing Experience Of The American Girl

Credit: madiejohnson / InstagramSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.