
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒருவகை வைரஸ் தாக்கம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2 வருடங்களாக கொரோனா பிடியில் இருந்து வந்த சென்னைவாசிகள், தற்பொழுது ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் வறட்டு இருமல், சளி மற்றும் காய்ச்சலினால் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக, சளி, காய்ச்சல் என்றால் 2 நாட்களில் சரியாகிவிடும் என்று இருந்த நிலையில், தற்போது வரும் இருமல் மற்றும் சளி தொல்லையிலிருந்து பொதுமக்கள் விடுபட 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இதனால், சென்னைவாசிகள் ஒருவித அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றனர்.