யாராவது அதை பார்த்தீர்களா? டுவிட்டரில் பதிவிட்ட விராட் கோலி: கவனத்தை ஈர்த்த சொமேட்டோ நிறுவனத்தின் பதில்


புத்தம் புதிய தமது அலைபேசி தொலைந்ததாக கூறி டுவிட்டரில் பதிவிட்ட விராட் கோலிக்கு உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ அளித்த பதில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய செல்போனை தொலைத்துவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர், பாக்ஸை கூட திறக்காத புதிய செல்போன் தொலைந்து போவது மிகவும் சோகமான உணர்வு. யாராவது அதை பார்த்தீர்களா? என்று பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவிற்கு உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ சுவாரசிய பதிலளித்துள்ளது.
அதில், உங்கள் புதிய செல்போன் காணாமல் போன சோகம் மறக்க ஐஸ் கீரிம் ஆர்டர் செய்து பாருங்கள் என சொமேட்டோ நிறுவனம் பதிவிட்டது.

யாராவது அதை பார்த்தீர்களா? டுவிட்டரில் பதிவிட்ட விராட் கோலி: கவனத்தை ஈர்த்த சொமேட்டோ நிறுவனத்தின் பதில் | Virat Kohli Loses Unboxed Phone Zomato Said This

இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த பதிலை விராட் கோலியின் ரசிகர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதே சமயம் மற்றொரு தரப்பினர் இது விராட் கோலியின் ஒரு விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.