கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரில் வசித்து வருபவர் க்ராச் போவ். கட்டிட தொழிலாளியான இவர், 30 ஆண்டுகளாக உழைத்துச் சேமித்தத் தொகையைக் கொண்டு விமான வீட்டைக் கட்டியுள்ளார். இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட இந்த வீடு, 20 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டு கட்டப்பட்டது. விமானப் பயணத்தின் மீதான ஆசைக் காரணமாக, விமானம் போன்ற வடிவத்தில் வீட்டைக் கட்டியுள்ளதாக க்ராச் போவ் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டை சுற்றுலாத் தலமாகவும் மாற்றியுள்ள க்ராச் போவ், உள்நாட்டு நபர்களிடம் இந்திய மதிப்பில் 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளிடம் 80 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கிறார்.