Kiara Sidharth Wedding: 100 வகை உணவுகள்.. 500 வெயிட்டர்கள்.. எச்சில் ஊற வைக்கும் கியாரா சித் கல்யாண சாப்பாடு!

கியாரா அத்வானி சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் அளிக்கப்பட்ட உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அரண்மனையில் திருமணம்பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள சூர்ய கர் அரண்மனையில் நேற்றிரவு கோலாகலமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், நடிகர் சாஹித் கபூர், நடிகை ஜுஹி சாவ்லா, ஈஷா அம்பானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ​ Jacqueline Fernandez: மோசடி மன்னனால் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிரபல நடிகை? பகீர் தகவல்!​
80 அறைகள்திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்காக அரண்மனையில் 80 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு அறைக்கும் ஒரு நாள் வாடகை மட்டும் 2 லட்சம் ரூபாய் என்றும் மொத்த தொகை ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு மேல் என்றும் தெரியவந்துள்ளது. கியாரா அத்வானி சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண் வைபவம் வழக்கமான ஹல்தி, சங்கீத் உள்ளிட்டவை அடங்கிய முறைப்படியே நடந்துள்ளது.
​ Jacqueline Fernandez: மோசடி மன்னனால் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிரபல நடிகை? பகீர் தகவல்!​
நேற்றிரவு திருமணம்6 ஆம் தேதி முதல் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. அதன்படி 6 ஆம் தேதி இசை நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. 6 ஆம் தேதி திருமணம் என கூறப்பட்ட நிலையில் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு நேற்றிரவு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தை முன்னிட்டு மணமகன் சித்தார்த் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். சித்தார்த் கோல்டன் நிற ஷெர்வானியும், மணமகளான கியாரா அத்வானி பிங்க் நிற லெஹங்காவும் அணிந்திருந்தனர்.
​ Nayanthara: எத்தனை கோடி கொடுத்தாலும் இனி அவர் கூட நடிக்கவே மாட்டேன்… பிரபல நடிகர் மீது உச்சக்கட்ட கோபத்தில் நயன்!​
100 வகை உணவுதிருமணத்தில் ராஜஸ்தான் மாநில நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது. சித்து கியாரா திருமண விருந்தில் 10 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. மெனுவில் இத்தாலியன், சீன, தென்னிந்திய, மெக்சிகன், ராஜஸ்தானி, பஞ்சாபி மற்றும் குஜராத்தி உணவு வகைகள் இடம்பெற்றது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு ஜெய்சல்மரின் கோட்வான் லட்டூம் பரிமாறப்பட்டுள்ளது.
​ Baby Sara: பிஞ்சிலேயே பழுத்த ‘சைவம்’ சாரா பாப்பா… என்னம்மா புகை விடுது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!​
500 வெயிட்டர்கள்சித்து கியாரா திருமணத்தில் 50 க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் உணவுகளை பரிமாறவும் விருந்தினர்களை கவனிக்கவும் மும்பையில் 200 பேர் டெல்லியில் இருந்து 300 பேர் என மொத்தம் 500 பணியாளர்கள் ஒரே டிரெஸ் கோடில் பங்கேற்றிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. சூர்யாகர் அரண்மனை ராஜஸ்தானின் மிகவும் கவர்ச்சியான சொத்துக்களில் ஒன்றாகும். இது ஜெய்சால்மரில் உள்ள சோக்கி தானி, பார்மர் சாலை Nh-15 அருகே அமைந்துள்ளது.
​ Leo, Trisha: மூன்றே நாளில் த்ரிஷா சென்னை திரும்பியதற்கான காரணம் இதுதான்.. படக்குழு தகவல்!​
3 நாட்களாக ட்ரெண்டிங்இந்த சொகுசு கோட்டை ஹோட்டல் திருமணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் உள்ளது. சித்தார் மல்ஹோத்ரா கியாரா அத்வானியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு கடந்த 3 நாட்களாக #SidharthKiaraWedding என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ​ Dancer Ramesh: 20 வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சோம்… அவர்தான் என் உயிர்… கதறும் இன்பவள்ளி!​
Kiara Sidharth Wedding

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.