Oneplus Buds Pro 2: Hans Zimmer டியூனிங்கில் 39 மணிநேரம் நீடிக்கும் முதல் ஒன்ப்ளஸ் ஆடியோ கருவி!

புது டெல்லியில் நடந்த Oneplus Cloud 11 நிகழ்ச்சியில்அந்த நிறுவனம் வரிசையாக அடுத்தடுத்து அசத்தலான கருவிகளை அறிமுகம் செய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி மக்கள்Oneplus 11 5G போனுக்குஅடுத்தபடியாக மிகவும் எதிர்பார்த்த கருவி Oneplus Buds Pro 2 ஆகும்.
இது ஒரு TWS கருவி என்றாலும் இதன் பேட்டரி என்பது இதுவரை செக்மென்ட்டிலேயே இல்லாத அளவு 39 மணிநேரம் நீடிக்கும் என்று ஒன்ப்ளஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதை Pirates Of the Caribbean, Batman போன்ற திரைப்படங்களில் இசை அமைத்த புகழ் பெற்ற Hans Zimmer தனியாக Tuning செய்துள்ளார். இதில் இந்தியாவிற்கென தனியாக உருவாக்கப்பட்ட Oneplus Buds Pro 2R என்ற மாடலும் உள்ளது.

விலை மற்றும் விற்பனை (Oneplus Buds Pro 2 Price) இந்த கருவி இந்தியாவில் 11,999 ஆயிரம் ரூபாய் விலையில் விற்கப்படும். இந்த பட்ஸ் Arbor Green மற்றும் Obsidian Black என இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் விற்பனை என்பது பிப்ரவரி 14 அன்று தொடங்கவுள்ளது.
இந்த கருவியை நாம் வாங்கவேண்டும் என்றால் நாம் Oneplus India இணையதளம், Amazon, Flipkart, Oneplus App Store மற்றும் வேறு சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் செல்லவேண்டும். இதன் இந்திய தனிப்பட்ட Oneplus Buds Pro 2R மாடல் 9,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும். இது மார்ச் முதல் விற்பனை செய்யப்படும்.
சிறப்பு வசதிகள் (Oneplus Buds Pro 2 Specs and features) இதில் நமக்கு சிறந்த ஆடியோ தரம் கிடைக்க 11mm Woofer மற்றும் 6mm Tweeters உள்ளது. இதில் நமக்கு Adaptive Noise Cancellation (ANC) வசதி உள்ளது. இதன் மூலமாக 8db அளவிற்கு தேவையில்லாத சத்தத்தை குறைக்கமுடியும்.
Oneplus Buds Pro 2 HansZimmer முதல்முறையாக இந்த கருவியில் Dynaudio Equaliser (EQ) வசதி உள்ளது. கூடுதலாக Bold, Serenade, Bass என மூன்று EQ settings உள்ளது. Google நிறுவனத்துடன் இணைந்து இந்த கருவியில் Spatial Audio வசதியையும் Oneplus அறிமுகம் செய்துள்ளது. மேலும் Hans Zimmer தனியாக உருவாக்கிய Custom EQ ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது.
Oneplus Buds Pro 2 Color இதில் ஏர் பட்ஸ் மட்டுமே சுமார் 9 மணிநேரங்கள் நீடிக்கும் என்றும் ANC பயன்படுத்தினால் 25 மணிநேரம் பேட்டரி நீடிக்கும் என்றும் ANC பயன்படுத்தவில்லை என்றால் 39 மணிநேரம் பேட்டரி நீடிக்கும் என்றும் Oneplus தெரிவித்துள்ளது.
Oneplus Buds Pro 2 Full நமக்கு Bluetooth 5.3 வயர்லெஸ் கனெக்டிவிட்டி, LHDC 4.0 Audio Codec சப்போர்ட், Google Fast pair வசதி, டூயல் கனெக்ஷன் வசதி, 54 Millisecond Ultra Low Latency மற்றும் 10 மீட்டர்கள் வரை ரேஞ்சு போன்றவை கிடைக்கும்.இதில் நமக்கு டச் வசதி, 3 மைக்ரோ போன் போன்றவை இருப்பதால் நமக்கு காலிங் அனுபவம் சிறப்பாக இருக்கும். இது IP55 Dust மற்றும் Water resistance கொண்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.