ஈரோடு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டி : 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்த முடிவு ?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. கடந்த 07ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று முன் தினம் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இடைத்தேர்தலை பொறுத்தவரையில், காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 77 வேட்பாளர்கள் + நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.