ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கமுதி சுற்றுவட்டார கிராமங்களான முத்துப்பட்டி, பெருமாள்தேவன் பட்டி, மூலக்கரைப்பட்டி, வடுகபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ விபத்தில் சிக்கியது.
பெருமாள்தேவன் பட்டி பகுதியில் சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி ஆட்டோ மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உயிருக்கு போராடிய ஆட்டோ ஓட்டுநர் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதேபோல் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்களும் அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி முத்துப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நல்லமருது (35) உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூன்று மாணவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in