வீடுகளுக்கு டெலிவெரியான கோழி கறி… ஞாயிற்று கிழமை அதுவுமா ஈரோடு கிழக்கில் ருசிகரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று
திமுக
கூட்டணி டார்கெட் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் ஆதரவு அலை டப் கொடுத்து வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். ஆளுங்கட்சியின் அசுர பலத்துக்கு மத்தியில் நேரெதிராக நிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த இடைத்தேர்தல் நம்பிக்கை அளிக்குமா என்பதை வாக்குப்பதிவு தான் தீர்மானிக்கும். தேர்தல் களம் இப்படி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கில் பண மழை பொழிய தொடங்கியுள்ளதாக கள நிலவரம் சொல்கிறது.

தினமும் காலை வேலைக்கு செல்லும் பெண்மணிகள், வேலைக்கு லீவ் போட்டுவிட்டு கட்சி பிரச்சாரத்துக்கு சென்று வருகிறார்களாம். காலையில் ஒரு கட்சி மாலையில் வேறொரு கட்சி என இரு தரப்பில் இருந்தும் ஆயிரம் ரூபாய் வரை கிடைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், அதிமுக பிரச்சாரத்துக்கு மக்களை செல்லவிடாமல், காலை உணவு, மதிய உணவு இரவு சாப்பாடு வரையில் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு கருங்கல்பாளைத்தில் இன்று 500 வீடுகளுக்கு தலா ஒரு கிலோ சிக்கன் கறியை திமுகவினர் வழங்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் அதன் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, திருப்பூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் சரபுதீன் என்பவரது காரில் இருந்ததாகக் கூறப்படும் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆனால், அந்த விசாரணை எந்த அளவுக்கு நடக்கிறது என்று தெரியவில்லை.

இடைதேர்த்தல் முடியும் வரை ஈரோடு கிழக்கு மக்களுக்கு தினம் தினம் இதுபோன்ற சர்ப்ரைஸ்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஞாயிற்று கிழமை என்பதால் வீடுகளுக்கு சிக்கன் கறி வழங்கப்பட்டுள்ள விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.