குஷியில் கில்… டாஸ் ஜெயித்ததும் முகத்தில் சந்தோஷத்தை பாருங்க – ஏன் தெரியுமா?

India vs West Indies 2nd Test Latest News Updates: டெல்லியில் நடைபெறும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Add Zee News as a Preferred Source

India vs West Indies: பிளேயிங் லெவனில் மாற்றம் இல்லை

இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அதே 11 வீரர்களுடன் களமிறங்கி உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி 2 மாற்றங்களை செய்துள்ளது. பிரண்டன் கிங், ஜோஹன் லெய்ன் ஆகியோருக்கு பதில் டெவிம் இம்லாக், ஆண்டர்சன் ஃபிலிப் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

India vs West Indies: டாஸ் வென்ற பின் கில் பேசியது

டாஸ் வென்றதை தொடர்ந்து வர்ணனையாளர் முரளி கார்த்திக்கிடம் பேசிய கேப்டன் சுப்மான் கில், “நாங்கள் முதலில் பேட்டிங் செய்வோம், முதல் நாளில் ஆடுகளம் நன்றாக இருக்கிறது. நிலைத்தன்மையாக விளையாடுவதுதான் எங்களுக்கு முக்கியம். மீண்டும் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும், நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அதே தீவிரத்தைக் கொண்டிருக்கவும் முயற்சிப்போம். 

நாங்கள் அடிக்கடி பேசும் ஒரு விஷயம், இந்த டெஸ்ட் போட்டியிலும் அதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம். நேர்மையாகச் சொன்னால், அதிகம் ஏதும் மாறவில்லை. நான் இன்னும் அதே ஆளாகதான் இருக்கின்றேன்” என்றார். மேலும், அனைத்து பார்மட்களிலும் கிடைத்துள்ள பிரமோஷன் குறித்து பேசிய அவர், “ஆனால் அதேநேரத்தில் இப்போது நிச்சயமாக எனக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. அந்த பொறுப்பும், எனக்கு இருக்கும் உற்சாகமான எதிர்காலமும் மிகவும் பிடித்திருக்கிறது” என்றார். 

India vs West Indies:  குஷியில் சுப்மான் கில் 

சுப்மான் கில் கேப்டனாக செயல்படும் 7வது டெஸ்ட் போட்டி இது. டெஸ்ட் அரங்கில் கேப்டனாக சுப்மான் கில் முதல்முறையாக இன்றுதான் டாஸ் வென்றுள்ளார். இதனால், டாஸ் வென்றதும் அவர் முகம் சந்தோஷத்தில் திளைத்தது. டாஸ் வென்று அணிக்கு திரும்பியபோது கூட அக்சர் பட்டேல், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் அவர் முதல்முறையாக டாஸ் வென்றதற்கு வேடிக்கையாக அவருக்கு வாழ்த்துகளை கூறுவதை பார்க்க முடிந்தது. கௌதம் கம்பீர் முகத்திலும் கூட ஒரு புன்சிரிப்பை பார்க்க முடிந்தது.

Shubman wins his first toss as the skipper and opts to bat first! #INDvWI pic.twitter.com/Mov6luGRXM

— Punjab Kings (@PunjabKingsIPL) October 10, 2025

IND vs WI: இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில் (கேப்டன்), துருவ் ஜுரல்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா,  வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். 

மேற்கு இந்திய தீவுகள்: ஜான் கேம்ப்பெல், டேஜெனரைன் சந்தர்பால், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), டெவின் இம்லாச் (விக்கெட் கீப்பர்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், காரி பியர், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ்.

An unchanged Playing XI for the 2nd #INDvWI Test

Updates ttps://t.co/GYLslRyLf8@IDFCFIRSTBank pic.twitter.com/dvwmNBYXGx

— BCCI (@BCCI) October 10, 2025

மேலும் படிக்க | ‘சுப்மான் கில்லை திணிக்கிறாங்க’ அகர்கரை கிழித்தெடுத்த அஸ்வின் – என்ன விஷயம்?

மேலும் படிக்க | மதுரை மைதானத்தை திறந்து வைத்த தோனி.. ஸ்டேடியத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

மேலும் படிக்க | கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கை மிரட்டிய கும்பல்.. ரூ. 5 கோடி வேண்டுமாம்! நடந்தது என்ன?

 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.