புதுடெல்லி: அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று பொதுநலன் மனுக்கள் தொடரப்பட்டு இன்று விசாரணைக்கு பட்டியலிப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மேலும் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. சமூக சேவகர் முகேஷ் குமார் என்பவர் தனது வழக்கறிஞர்கள் மூலமாக தாக்கல் செய்த மனுவில் ஒன்றிய அரசின் பல்வேறு ஏஜென்சிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.