அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்து: வீடியோ


அமெரிக்காவின் அலபாமாவில் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஹெலிகாப்டர் விபத்து

அமெரிக்காவில் டென்னசி தேசிய காவலரின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் அலபாமாவில் உள்ள பரபரப்பான சாலையின் அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பெயர் குறிப்பிடாமல் வழங்கிய தகவலில் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் புலனாய்வு அதிகாரி ப்ரெண்ட் பேட்டர்சன், பலியானவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றும், ஆனால் தரையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வழங்கியுள்ளார்.

யு எச்-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மதியம் 3 மணிக்கு ஹன்ட்ஸ்வில்லிக்கு வடமேற்கே சுமார் 10 மைல் தொலைவில் உள்ள மேடிசன் கவுண்டியின் நெடுஞ்சாலை 53ல் தரையில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தின் போது சம்பவ இடத்தில் இருந்து அடர்ந்த கருப்பு புகை எழுவதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்து: வீடியோ | Black Hawk Helicopter Crashes In Alabama UsTwitter 

 யு எச்-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் 

இந்த  யு எச்-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் பல தசாப்தங்களாக உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றால் 12 வீரர்கள் வரை எடுத்து செல்ல முடியும், அத்துடன் இவை நம்பகமான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய விமானமாக பார்க்கப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.