விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடர் இளம் நடிகர்களை வைத்து இயக்கப்படுகிறது, அதுவும் கல்லூரியை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிறது.இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறி இருக்கிறது.
இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், அப்பா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது.
எல்லா கல்லூரி கதை போல இதிலும் இரண்டு கேங் உள்ளனர், அதில் நாயகி வெண்ணிலாவின் கேங் தான் ரசிகர்களின் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரில் நாயகியின் தோழனாக நடித்தவர் தான் ஹரி.இவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆனால், ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் ‘தமிழ்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில், ஹரி திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. இவருடைய மறைவிற்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.