Yogi Babu, MS Dhoni: எம்எஸ் தோனி கொடுத்த பரிசு.. எப்போவும் மறக்கமாட்டேன் என நெகிழ்ந்த யோகி பாபு!

நடிகர் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி பரிசு அளித்துள்ளார்.

யோகி பாபுதமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. 2009ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான யோகி பாபு தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள யோகி பாபு பின்னர் கவனத்தை பெறும் கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
​ Suriya, Sachin Tendulkar: சத்தமே இல்லாமல் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த நடிகர் சூர்யா… ​
வாரிசுரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சந்தானம் என பல நடிகர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார் யோகி பாபு. அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் பொம்மை நாயகி படம் வெளியானது. ​ Ajith, AK 62: அஜித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? வாயை பிளக்க வைக்கும் ஒரு காரின் விலை!​
ஜெயிலர்மேலும் தி கிரேட் இந்தியன் கிச்சன், மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் யோகி பாபு. மேலும் பூமர் அங்கிள், மெடிக்கல் மிராக்கிள், ஜெயிலர், உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. படப்பிடிப்பில் பிஸியாக உள்ள யோகி பாபு அவ்வப்போது கோவில்களிலும் வழிபாடு நடத்தி வருகிறார்.
​ Rajinikanth: ரஜினிகாந்தின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா? தீயாய் பரவும் தகவல்!​
தோனி கொடுத்த பரிசுயோகி பாபு கோவில்களுக்கு செல்லும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் கையிவ் பேட்டுடன் உள்ளார் யோகி பாபு. அந்த பேட்டை கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி யோகி பாபுவுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
​ Rajinikanth: ரஜினிகாந்தின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா? தீயாய் பரவும் தகவல்!​
நெகிழ்ச்சி பேட்டுடன் பேசியிருக்கும் யோகி பாபு அந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் எம்.எஸ்.தோனி கைகளில் இருந்தும் அவர் விளையாடிய நெட்டில் இருந்தும் நேரடியாக இந்த பேட் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பேட்டை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி தோனி சார். உங்கள் கிரிக்கெட் நினைவுகளைப் போல சினிமாவில் நீங்கள் கால்பதித்திருக்கும் இந்த நினைவுகளையும் எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்” என்று பதிவிட்டுள்ளார். சாக்‌ஷி தோனியையும் டேக் செய்துள்ளார்.
​ Anjali Nair: தவறாக நடக்க முயன்றார்.. ரயிலில் இருந்து தள்ளி கொல்ல முயன்றார்.. வில்லன் நடிகர் மீது நடிகை அஞ்சலி நாயர் புகீர் புகார்!​
லெட்ஸ் கெட் மேரீட்கிரிக்கெட் வீரரான எம்எஸ் தோனி, Lets get married என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா , நதியா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
​ Vaathi Review: க்ளைமேக்ஸ் வேற லெவல்.. வாத்தி படத்தை இன்ச் பை இன்ச்சாக விமர்சித்த பிரபலம்!​
yogi babu

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.